நீங்கள் சைவ உணவு சாப்பிடும் நபராக இருந்து, உங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில், பன்னீரை விடச் சிறந்தது வேறு இல்லை. குறைந்த கொழுப்பு கொண்ட பன்னீர் தான் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இதை பல விதங்களில் உணவில் சேர்க்கலாம். பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், பன்னீர் டிக்கா என்று பன்னீரை பல்வேறு விதமாக உணவில் சேர்க்கிறோம்.
ஆனால் அநேகம் பேர் இதை பச்சையாகவும் சாப்பிட விரும்புகிறார்கள். நீங்கள் சைவ உணவாளராக இருந்தால், பன்னீர் உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான புரதச்சத்தை தருகிறது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நீங்கள் பன்னீரை பகலில் எந்த நேரத்திலும் எடுத்து கொள்ளலாம் அல்லது இரவு உணவுடன் சாப்பிடலாம்.
இதுவும் உதவலாம்:யாரெல்லாம் கொய்யாப்பழம் சாப்பிட கூடாது?
நீங்கள் உடல் எடை குறைக்க விரும்பினால், பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் உடல் எடை குறைக்க நடவடிக்கை எடுக்கும் போது, பெண்கள் பல உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். இதனால் சோர்வாக உணர்வார்கள். இச்சமயத்தில், பன்னீர் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. பன்னீரில் உடல் நலத்திற்கு தேவை என்று கருதப்படும் புரதச்சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
குறைந்த கொழுப்பு கொண்ட பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரின் கொழுப்பு அளவும் குறைவாக இருக்கும். பசும்பாலில் குறைந்த கொழுப்பு இருந்தாலும், அதிகப்படியான புரதச்சத்து நிறைந்தது. புரதச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில், தினமும் இதை உணவில் சேருங்கள். முட்டை சாப்பிடாத மக்கள், அவர்களுடைய தினசரி உணவில் புரதச்சத்திற்கு இதை சாப்பிடலாம்.
குறைந்த கலோரி கொண்ட உணவுகளில் சிறந்த உணவு இதுவே. குறைந்த கலோரி உணவுப் பழக்கத்தை பின்பற்றுபவர்களுக்குப் பன்னீர் தான் சிறந்த உணவு. இது உடல் எடையையும் கூட்டாது மற்றும் விரும்பி உண்ணலாம்.குறைந்த கொழுப்பு கொண்ட பன்னீர் ஆரோக்கியமான கொழுப்பை உருவாக்கும்.
சத்து நிறைந்த கொழுப்பு என்பது நம் உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியத்துடன் வைத்து இருக்க கூடியது. கொழுப்பு நிறைந்த உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது, ஆனால் பன்னீர் எளிதில் ஜீரணம் ஆகும், உடலுக்கும் மிகவும் நல்லது.
இதுவும் உதவலாம்:உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?
திரும்ப திரும்ப பசி எடுக்கும் சமயத்தில் பன்னீரை சாப்பிடலாம். இரவு சாப்பாடுக்கு முன் பசி எடுத்தால், நீங்கள் பன்னீர் எடுத்து கொள்ளலாம். இந்த முறையில், நீங்கள் வெளியே சாப்பிடும் பழக்கத்தை அறவே நிறுத்தி விட வேண்டும்
நீங்களும் பன்னீர் உதவியால், உங்கள் உடல் எடையை வெகுவாக குறைக்கலாம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com