herzindagi
tips to increase child height

குழந்தையின் உயரம் அதிகரிக்க பெற்றோர் என்ன செய்யலாம் ?

குழந்தையின் உயரம் குறைவாக இருப்பதால் யாரேனும் கிண்டல் அடிக்கிறார்களா ? கவலைப்பட வேண்டாம். இந்த கட்டுரையில் முழு தீர்வு உள்ளது.
Editorial
Updated:- 2024-03-18, 16:07 IST

சமூகத்தில் எந்த ஒரு நபரையும் உருவக் கேலி செய்வது மிகவும் தவறு. உயரத்தை வைத்து நெட்டை, குட்டை என கிண்டல் அடிப்பது இளைஞர்களிடையே பொதுவான விஷயம் என்றாலும் அது சென்றடையும் நபருக்கு மனதளவில் வலியை தரலாம். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெரும்பாலானோர் இதை எளிதாக கடந்து சென்றுவிடுவர். ஆனால் குழந்தைகளின் மனதில் ஒருமுறை பதிந்துவிட்டால் அந்த எண்ணத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது கடினம். பெற்றோரும் இதற்கு பதில் தெரியாமல் கவலை அடைகின்றனர். குழந்தை நல மருத்துவரிடம் நாங்கள் தான் குள்ளமாக இருக்கிறோம்... குழந்தையாவது உயரமாக வளர எதேனும் வழி உள்ளதா என பெற்றோரும் கேட்கின்றனர். ஒரு சில குழந்தைகளும் தொலைக்காட்சியை பார்த்துவிட்டு உயரமாக வளர்வதற்கு கம்பியை பிடித்து தொங்கலாமா ? விளம்பரங்களில் வரும் பவுடரை குடிக்கலாமா ? என்ன சாப்பிட்டால் உயரமாக வளர முடியும் என சிந்திக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

how to increase child height

குழந்தையின் உயரத்தை அதிகரிக்க விரும்பும் முன்பாக குழந்தை வயதிற்கு ஏற்ற உயரத்தில் இருக்கிறதா என சோதனை செய்ய வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் குழந்தை வளர்ச்சி அட்டவணையில் விவரங்களை பதிவிட்டால் குழந்தை வயதிற்கு ஏற்ற உயரத்தில் இருக்கிறதா என கண்டுபிடித்துவிடலாம்.  ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இதை சோதிக்கலாம்.

அதில் குழந்தையின் உயரம் சராசரியை விட குறைவாக சிவப்பு கோட்டிற்கு கீழ் இருந்தால் அடுத்த என்ன செய்யலாம் என்பதை யோசியுங்கள். குழந்தையின் உயரம் குறைவாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.

  • நோய் பாதிப்பு / ஹார்மோன் குறைபாடு
  • குடும்ப வரலாறு
  • ஊட்டச்சத்து குறைபாடு

மேலும் படிங்க மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது நல்லதா ? கெட்டதா ? உடல்நலன் பாதிக்கப்படுமா ?

உயரம் குறைவாக இருக்கும் குழந்தைக்கு அதிக உணவு கொடுத்தால் விரைவில் உயரமாகிவிடுவார்கள் என நினைப்பது தவறு. இந்த மூன்று காரணங்களை தவிர்த்து Mid parental height என்று சொல்லக்கூடிய குழந்தையின் அப்பா, அம்மா உயரத்தையும் கணக்கிட வேண்டும். இவர்கள் இருவரின் சராசரியில் குழந்தை ஒரு சில அங்குலம் உயரமாகவும் அல்லது குறைவாக இருப்பதும் இயல்பானதே.

ஒரு சில குழந்தைகளின் உயரத்தை பத்து வயதிற்குள்ளாகவே நிர்ணயிப்பது தவறு. அதாவது பத்து வயதில் உயரம் குறைவாக இருக்கும் குழந்தை  18 வயதில் கூட சராசரி உயரத்தை எட்டலாம். குழந்தை வளர்ச்சி அட்டவணையின் சிவப்பு கோட்டிற்கு கீழ் வளர்ச்சி இருந்தால் உடனடியாக கவலைப்பட தேவையில்லை. மரபணு ரீதியாக அல்லது குடும்ப வரலாறு காரணங்களால் குழந்தையின் உயரம் கம்மியாக இருந்தால் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

மேலும் குழந்தையின் எலும்பு முதிர்ச்சி, ஹார்மோன் கோளாறு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் எலும்பு முதிர்ச்சி மெதுவாக இருந்தாலும் லேட் பிக் அப் ஆக வாய்ப்பு உண்டு. நோய் பாதிப்பு இருந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும். அதேபோல குழந்தையின் உயரத்தை உணவு கொடுத்து அதிகரிக்க முடியாது.

மேலும் படிங்க அதிக திரை நேரத்தால் கண்களுக்கு பாதிப்பு! கண் பார்வையை மேம்படுத்துவது எப்படி ?

கூடைப்பந்து, பேட்மிண்டன், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் அவர்களை கவனம் செலுத்த வைத்தால் உயரத்தை அதிகரிக்க முடியும். இந்த விளையாட்டுகள் ஹார்மோன் செயல்பாட்டை துரிதப்படுத்தி குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com