
சினிமா பட வசனம் போல் இரவு நேரத்தில் எத்தனை மணி நேரம் தூங்கினால் மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது போல் சுகம் கிடைக்காது. தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தூங்கி உடலுக்கு ஓய்வளிக்கும் நாம் மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. மதிய நேரத்தில் கொஞ்சம் தூங்கலாமா அல்லது தூங்க கூடாதா ? மதிய நேரத்தில் சாப்பிட்டவுடன் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா போன்ற கேள்விகளுக்கு விடை காணலாம்.
காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து இதர பணிகளை முடித்து மதிய நேரம் வரும் போது பெரும்பாலான பெண்கள் குட்டி தூக்கம் போடுவதை விரும்புகின்றனர். வேலைக்கு செல்லும் நபர்கள் மதிய நேரத்தை தவிர்க்கின்றனர். ஆனால் சனி, ஞாயிற்றுகிழமைகளில் தூங்கி பழகுவதால் வார நாட்களில் தங்களை அறியாமலேயே அலுவலகத்தில் தூங்கி விடுகின்றனர்.
தினமும் உடற்பயிற்சி செய்வோர் தங்களது உடல்எடை குறையாத பட்சத்தில் அதற்கு மதிய நேர தூக்கம் தான் காரணமோ என்று நினைக்கின்றனர். மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது உடல் பருமனை அதிகரிக்குமா ? தீங்கு விளைவிக்குமா ?
மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவதை ஆங்கிலத்தில் afternoon cat nap என்று சொல்கிறார்கள். வீட்டில் வளர்க்கும் சில பூனைகளை பார்த்தால் தூங்கி கொண்டே இருப்பது போல் இருக்கும் பிறகு திடீரென விழிக்கும். இது பூனை தூக்கம் என்றும் சொல்லப்படுகிறது. ஆராய்ச்சிகளின் படி மதிய நேரத்தில் குறிப்பிட்ட நேரம் தூங்குவது மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
மதிய நேரத்தில் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் குட்டி தூக்கம் போடுவோருக்கு ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும் புதிய விஷயங்களை எளிதில் ஞாபகம் வைக்கும் திறன் மேம்படுவதாகவும் கூறப்படுறது. எனவே மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது நல்லது தான்.
மேலும் படிங்க அதிக திரை நேரத்தால் கண்களுக்கு பாதிப்பு! கண் பார்வையை மேம்படுத்துவது எப்படி ?
மதிய நேரமான ஒரு மணியில் இருந்து நான்கு மணிக்குள் 40 நிமிடம் வரை தூங்குவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதற்கு மேல் தூங்கினால் அசதியாக இருக்கும். மதிய நேரத்தில் அதிக நேரம் தூங்குவது ஆழ்ந்த தூக்கத்திற்கு நம்மை கொண்டு செல்லும். ஒரு வேளை நாம் திடீரென விழித்தால் தலைவலிக்க தொடங்கிவிடும்.
மதிய நேரத்தில் இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தால் சோர்வு ஏற்பட்டு உடல் அசதியாக இருக்கும். அதன் பிறகு நாம் விழித்தால் கொட்டாவி தான் வரும். மதிய நேர தூக்கம் என்பது இரண்டாம் தூக்கம் மட்டுமே. மதிய நேரத்தில் அதிக நேரம் தூங்கி பழகிவிட்டால் இரவு தூக்கம் கெட்டுவிடும்.
மேலும் படிங்க மோசமான தூக்க பழக்கத்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com