
நீண்ட, அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை பெற விரும்புபவரா நீங்கள்? அப்படியானால், உங்கள் தலைமுடிக்கு வலுவூட்டும் ஒரு புரதமான கெரட்டின் (Keratin) குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி, கெரட்டின் அளவை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் 5 உணவுகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மேலும் படிக்க: கூந்தல் உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறதா? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
கெரட்டின் என்பது உங்கள் தலைமுடியின் அடிப்படை அங்கமாக இருக்கும் ஒரு புரதமாகும். இது முடிக்கு அடர்த்தி மற்றும் கட்டமைப்பை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உடலில் கெரட்டின் அளவை அதிகரிப்பது, ஆரோக்கியமான, அடர்த்தியான மற்றும் விரைவான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
முட்டையில் பயோட்டின் மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இவை உங்கள் உடலை இயற்கையாகவே அதிக கெரட்டின் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே, நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக கடைபிடிக்கலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது. கெரட்டின் உற்பத்திக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து இதுவாகும். அதன்படி, உங்கள் உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு அவசியம் இடம்பெற வேண்டும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காய எண்ணெய்; உங்கள் வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்
மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச்சத்து காணப்படுகின்றன. இவை உங்கள் கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனை வைட்டமின் ஈ-யின் ஆற்றல் மையம் என்று கூறலாம். உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரித்து, கெரட்டின் உற்பத்திக்கு வழிவகுக்கும் சத்து இதில் காணப்படுகிறது. இதனை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் உணவில் ஏதேனும் ஒரு கீரை வகை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன. இவை கூந்தல் வளர்ச்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
இந்த உணவுகளை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். மேலும், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com