கோடைக்காலத்தில் பாதுகாப்புடன் உடற்பயிற்சி செய்வதற்கான வழிகள்!

அதிகாலை பொழுதை விட்டு மற்ற நேரங்களில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்களது உடலில் உள்ள ஆற்றலை இழக்கச் செய்யும்.

exercising in summer season

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் எவ்வித சிரமமும் இன்றி உடற்பயிற்சி செய்தாலும், கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை சோர்வாக்குவதோடு,பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் நமக்கு ஏற்படுத்தும் என்பதால் இந்த காலங்களில் எச்சரிக்கையுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆம் அடிக்கிற வெயிலில் வெளியில் சென்று வந்தாலே அதீத வியர்வை ஏற்படும். இந்த காலக்கட்டத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சிகளால் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். இவ்வாறு உடலில் உள்ள நீர் அதிகளவில் வெளியேறும் போது அதனுடன் எலக்ட்ரோலைட்டுகள் எனப்படும் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் போன்ற நுண்ணூட்டத்துக்கள் அனைத்தும் உடலிருந்து வெளியேறக்கூடும். இதனால் தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, பலவீனம், சீரற்ற இதய துடிப்பு போன்ற பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க நேரிடும்.

exercise

வெயில்காலமும் உடற்பயிற்சியும்:

வெயில்காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் அனைத்தும் வெளியேறக்கூடும். இந்த சமயத்தில் உடல் எடையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் நாம் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளால் பக்கவாதம் ஏற்படும். ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது பலர் உயிரிழந்துவிட்டனர் என்ற செய்திகளையெல்லாம் பார்த்திருப்பீர்கள். இதற்கெல்லாம் உடலின் வெப்பநிலை சீரற்ற நிலையில் இருப்பதோடு இதயத்துடிப்பும் சீராமல் இருக்கும். இதனால் சைலன்ட் கில்லர் போன்று மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே எப்போதும் உடற்பயிற்சி செய்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவும் கோடைக்காலத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது அதீத கவனம் வேண்டாம். இதோ வெயில்காலத்தில் எந்த மாதிரியாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது:

  • வெயில்காலங்களில் உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் சூரியன் உதிக்கும் நேரத்தில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். அதிகாலை பொழுதை விட்டு மற்ற நேரங்களில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்களது உடலில் உள்ள ஆற்றலை இழக்கச் செய்யும். மேலும் சூரியன் மறையும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கவும்.
  • வெயிலுக்கு உகந்த காட்டன் ஆடைகளை அணிந்து உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிந்து உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • வெயில் காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யும் போது, அடிக்கடி ஓய்வு எடுத்து மேற்கொள்வது நல்லது. இது உங்களை அலுப்பாகாமல் பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
summer exercise
  • கோடைக்காலத்தில் வெளியில் நின்று உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் சன்ஸ்க்ரீன் லோஷனைப் பயன்படுத்தவும். வெயில்காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
  • உடலுக்கு ஆற்றலை அளிக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP