herzindagi
cooked rice water image big

Rice Water Weight Loss: சோறு வடித்த கஞ்சி தண்ணீரை வைத்து வேகமாக உடல் எடையை குறைக்க வழிகள்

எடை இழப்புக்கு கஞ்சி தண்ணீரை இதனுடன் இனைத்து குடித்துவந்தால். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் வேகமாக குறைக்கலாம். இந்த பயனுள்ள முறைகளை பயன்படுத்தி பாருங்கள் 
Editorial
Updated:- 2024-06-25, 22:07 IST

அரிசி நீர் என்பது அரிசியை சமைத்த பிறகு வடிகட்டி எடுக்கும் கஞ்சி தண்ணீர் இது ஊட்டச்சத்து நிறைந்த மாவுச்சத்து நீர். ஆரோக்கியமான மற்றும் நிலையான வழியில் எடை இழப்புக்கு உதவும் இந்த தண்ணீரை நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது. மல்டிஃபிட்டின் ஊட்டச்சத்து நிபுணரான ரோஹித் வாக்மரே என்ற நிபுணர் கூறுகையில் எடை இழப்புக்கு கஞ்சி தண்ணீர் உதவும் ஐந்து வழிகளைப் பற்றி கூறியுள்ளார். 

மேலும் படிக்க: பெண்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் ஆரோக்கிய பலன்களை தரும் பலாப்பழம்

கஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்

cooked rice water new inside

வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குவது அதிசயங்களைச் செய்யும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது நாள் முழுவதும் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தலாம், இது மறைமுகமாக குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது.

உணவுக்கு முன் கஞ்சி தண்ணீரை உட்கொள்ள வேண்டும் 

பல ஆய்வுகளின்படி நீங்கள் சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் கஞ்சி தண்ணீரைக் குடித்தால் அது ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளலை 10-15% குறைக்கலாம். கஞ்சி குறைந்த கலோரி அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பானமாக இருப்பதால் உங்கள் ஒட்டுமொத்த கலோரி நுகர்வு குறைவாக இருக்க செய்கிறது.

அரிசி தண்ணீரை சூப் செய்ய பயன்படுத்தலாம்

cooked rice water inside

சூப்கள் செய்ய கஞ்சி தண்ணீரை பயன்படுத்தலாம். சூப்கள் உடலுக்கு போதுமான திருப்தியை அதிகரிக்கலாம் மற்றும் கலோரிகளை 20% குறைக்கலாம். எனவே இது எடையை குறைக்க பயனுள்ளதாக அமைகிறது.

கிரீன் டீயில் அரிசி நீரை சேர்க்கவும்

மேலும் படிக்க: ஆயுர்வேதப்படி வெப்ப அலைகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான குடலை பராமரிக்க எளிய வழிகள்

கிரீன் டீ இயல்பாக வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. கஞ்சி நீரில் கலந்து பருகுவது எடை குறைக்க உதவும். மிதமான உடற்பயிற்சியின் போது கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு நன்மைகளை 17% அதிகரிக்க பச்சை தேயிலை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com