herzindagi
overthinking causes

அதீத சிந்தனையை தவிர்த்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்

எந்தவொரு விஷயத்தையும் அதீதமாக சிந்திப்பது மிகவும் தவறு. அதீதமாக சிந்திப்பது மன அமைதியை குலைத்துவிடும்.
Editorial
Updated:- 2024-03-12, 22:59 IST

நாம் அனைவரும் சில நேரங்களில் அதீத சிந்தனையால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கிறோம். குறிப்பிட்ட விஷயத்தை அதீதமாக சிந்திப்பது மன நலனுக்கு தீங்கு விளைவிக்கும். அதீத சிந்தனையில் இருந்து விடுபட சில விஷயங்களை தொடர்ச்சியாக கடைபிடித்தால் அவை நம் வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

techinques to stop overthinking

சுவாசப் பயிற்சி

தினமும் பத்து நிமிடங்களுக்கு சுவாசப் பயிற்சி செய்வது மனதை அமைதியாக்கும், அதீத மற்றும் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விடுபட உதவும். சுவாசப் பயிற்சி மன அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கும். இந்த எளிய செயல்முறை நம்மை அதீத சிந்தனையில் இருந்து விலக்கி வைக்கும்.

கேள்வி கேளுங்கள்

உங்களை நீங்களே சில கேள்விகளை கேட்டுக்கொள்வதன் மூலம் அதீதமாக சிந்திப்பது எந்தவித பலனையும் தராது என்பதை புரிந்துகொள்ள உதவும். இப்படி செய்வது அதீத சிந்தனையின் தாக்கத்தை குறைக்கும்.

எண்ணங்களை சுருக்கவும்

அதீத சிந்தனை ஏற்படும் போது உங்கள் கண் முன்னே சில விஷயங்களை நிலை நிறுத்துங்கள். அதீத சிந்தனையால் ஒரு பயனும் இல்லை என்பதை மனதுக்கு உணர்த்துங்கள். இது ஒருவகையான நிராகரிப்பாகும்.

கற்பனையை தவிர்க்கவும்

தேவையில்லாத விஷயங்களை கற்பனை செய்து நீங்கள் உங்கள் மூளையை ஏமாற்றுகிறீர்கள் என உணருங்கள். அதீத சிந்தனை வரும் போதெல்லாம் கற்பனை செய்வதை நிறுத்துவது காலப்போக்கில் உங்கள் கவனத்தை நேர்மறையான சிந்தனைக்கு மாற்ற உதவும்.

மேலும் படிங்க மகிழ்ச்சியாக வாழ உதவும் முக்கியமான 10 பழக்கங்கள்!

இயல்பான மாற்றம்

உறுதிமொழி எடுப்பது அல்லது தியானம் போன்ற புதிய பழக்கங்களைச் சேர்ப்பது அதீத சிந்தனையின் சுழற்சியை உடைக்கும். இந்த நடைமுறைகள் நேர்மறை சிந்தனைக்கு ஊக்குவிக்கின்றன. மேலும் நம்பிக்கையான கண்ணோட்டத்தை நோக்கி வாழ்க்கையை நகர்த்த முடியும்.

இரக்கம் காட்டுதல்

அதீத சிந்தனையை தவிர்க்க உங்களின் மதிப்பை நீங்களே உணருங்கள். உங்கள் பலம் மற்றும் சாதனைகளை அங்கீகரிப்பது ஒரு நேர்மறையான சிந்தனை உருவத்தை வளர்க்கும் மற்றும் விமர்சனங்களை எதிர்த்துப் போராட உதவும்.

சமூக ஆதரவு

நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வது உங்களை கவலைகளில் இருந்து விடுபட்டு வேறுபட்ட கண்ணோட்டத்திற்கு அழைத்து செல்லும். நட்பு வட்டாரம் உங்களின் மனநிலையை உயர்த்தும் மற்றும் அதீத சிந்தனையை நீர்த்துப்போகச் செய்யும்.

மேலும் படிங்க இரவில் சிறந்த தூக்கத்தை பெறுவதற்கான வழிகள்!

இயற்கையுடன் தொடர்பு

இயற்கையுடன் உங்களை தொடர்புபடுத்தி கொள்வது ஒரு அமைதியான விளைவை ஏற்படுத்தும், மன அழுத்தத்தை குறைக்கும். வாரத்திற்கு ஒரு முறை பீச் செல்லவும் அல்லது மலையேற்றத்தில் விருப்பம் இருந்தால் மாதத்திற்கு இரண்டு முறை மலையேற்றத்தில் ஈடுபடுங்கள். இவை உங்களை அதீத சிந்தனையில் இருந்து விடுபட உதவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com