herzindagi
image

பால் பொருட்களில் ஒவ்வாமை கொண்டவரா நீங்கள்? கால்சியம் சத்துக்கான எளிய மாற்று வழிகள் இதோ

பால் தவிர்த்து கால்சியம் சத்து அதிகமாக காணப்படும் உணவுகளை இதில் பார்க்கலாம். பால் பொருட்களை உண்பதில் ஒவ்வாமை கொண்டவர்களுக்கு இவை சிறந்த தேர்வாக அமையும். இதன் மூலம் கால்சியம் சத்தை எளிதாக பெறலாம்.
Editorial
Updated:- 2025-10-24, 14:24 IST

பாலில் அதிகமான கால்சியம் சத்து இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வதில் ஒவ்வாமை இருக்கும். இதற்காக பால் எடுத்துக் கொள்வதில் பலர் தயக்கம் காண்பிக்கின்றனர்.

மேலும் படிக்க: சளி, இருமலுக்கு தீர்வு தரும்; சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; மிரள வைக்கும் மிளகின் நன்மைகள்

 

அத்தகைய சூழலில் கால்சியம் சத்து கிடைப்பதை உறுதி செய்ய முடியாது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியமான மற்றும் வலிமையான வளர்ச்சிக்கு கால்சியம் சத்து இன்றியமையாதது. அதனடிப்படையில், பால் தவிர்த்து அதிக கால்சியம் சத்து நிறைந்த உணவு பொருட்கள் குறித்து இதில் காணலாம்.

 

சியா விதைகள்:

 

சியா விதைகளில் கால்சியம் சத்து கணிசமான அளவு காணப்படுகிறது. இரண்டு டேபிள்ஸ்பூன் சியா விதைகளில் சுமார் 179 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகிய சத்துகளும் நிறைந்துள்ளன. இவற்றை தயிர், ஸ்மூத்தி, ஓட்ஸ் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதே நேரத்தில், இதன் சத்துகளையும் பெறலாம்.

 

பாதாம் பருப்பு:

 

சுமார் 100 கிராம் பாதாம் பருப்பில் ஏறத்தாழ 264 மி.கி கால்சியம் சத்து காணப்படுகிறது. இவை ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. தினமும் சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் குறிப்பிட்ட அளவிற்கு கால்சியம் சத்துகளை பெறலாம். இது இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Almond

மேலும் படிக்க: அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? இவற்றை மிஸ் பண்ணாதீங்க; ஹீமோகுளோபின் அளவை ஈசியா அதிகரிக்கலாம்

 

எள்:

 

ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளில் சுமார் 88 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இதில், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளன. பொரியல், சாலட்கள், சிற்றுண்டி வகை உணவுகள் போன்றவற்றுடன் எள்ளை எளிதாக சேர்த்து சாப்பிடலாம். இது உணவுக்கு கூடுதல் சுவையையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது.

 

டோஃபு:

 

அரை கப் டோஃபுவில் சுமார் 350 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இது தாவர அடிப்படையிலான உணவுகளில் ஒரு பிரதான பொருளாகும். இதனை க்ரில் செய்து ஆம்லெட் போன்று தயாரித்து சாப்பிடலாம். மேலும், மற்ற உணவுகளுடனும் இதனை எளிதாக சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் சுவை மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் இரண்டையும் நீங்கள் பெற முடியும்.

Tofu

 

அத்திப்பழங்கள்:

 

ஒரு கப் அத்திப்பழத்தில் சுமார் 241 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். இது மட்டுமின்றி நார்ச்சத்து மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் அத்திப்பழத்தில் உள்ளன. இதனை சிற்றுண்டியாக உண்ணலாம். மேலும், ஜூஸ் அல்லது ஸ்மூத்தி தயாரித்து இதனை எடுத்துக் கொள்ளலாம்.

 

இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது கால்சியம் சத்தை பெற எளிதான வழியாகும். குறிப்பாக, பால் பொருட்கள் சாப்பிடாதவர்களுக்கு இது நல்ல மாற்றாக அமையும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com