கர்ப்பம் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரம், எதிர்பார்ப்பு மற்றும் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும் நாளாகும். இருப்பினும் இந்தியாவின் மழைக்காலங்களில் கர்ப்ப காலத்தை எதிர்க்கொள்வது சவால்களைக் கொண்டுருக்கிறது. குறிப்பாக அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சரியான கவனிப்பை உறுதி செய்வது முக்கியம். மேலும் மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியம். இந்த விவரங்களைப் பற்றி அறிய பெர்னாண்டஸ் மருத்துவமனையின் கல்வியியல் துறைத் தலைவர் டாக்டர் ஒய் சுபாஷினி, ஆலோசகர் மகப்பேறு மருத்துவர் ஆலோசனை அளித்துள்ளார்.
மேலும் படிக்க: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க சிறந்த 6 விதைகள்
மழைக்காலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருக்கும். அனாலும் கர்ப்பிணிப் பெண்கள் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த காலக்கட்டத்தில் மாசுபடுவதைத் தவிர்க்க சுத்திகரிக்கப்பட்ட அல்லது கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். போதுமான நீரேற்றம் தலைவலி, சோர்வு, குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் தோல் வறட்சியைத் தடுக்க உதவுகிறது. வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். நீங்கள் தேங்காய் தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் குடிக்கலாம்.
மழைக்காலங்களில் பழங்களை உடனடியாக சாப்பிட வேண்டும். பழங்களை வெட்டப்பட்டு அப்படியே வைத்துவிட்டால் ஈக்கள் மற்றும் பூச்சிகள் வந்து பழங்களை சாப்பிடும். இது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதல்ல வெட்டப்பட்ட பழங்களை உடனடியாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூசாக கூடித்தாலும் உடனே குடிப்பது நல்லது. வெளியே வாங்கி வரும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை இரண்டு, மூன்று முறை கழுவி சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது. அதிக ஈரப்பதம் காரணமாக பருவமழை காலத்தில் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களில் அதிக ஆபத்து உள்ளது. எனவே புதிதாக வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள். உணவை சமைத்து நேரம் கழித்து சாப்பிட வேண்டாம்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் தயிர் போன்றவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உணவுப் பரிந்துரைகளுக்கு உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கூட நீங்கள் ஆலோசனை செய்யலாம்.
சுகாதாரம் மற்றும் வழக்கமான கை சுத்திகரிப்பு ஆகியவை கிருமிகளைத் தடுக்கவும், தாய் மற்றும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தும் இவற்றை செய்ய வேண்டும். ஈரப்பதமான காலநிலையில் பொதுவான பூஞ்சை தொற்றுகளைத் தடுக்க சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருங்கள்.
பருத்தி போன்ற இலவான மற்றும் நிங்கள் இயல்பாக சுவாசிக்கக்கூடிய துணிகளைத் தேர்ந்தெடுங்கள். மழைக்காலத்தின் போது அதிகப்படியான வியர்வையைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் தோல் தொற்று அபாயத்தை அதிகரிக்கும் இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க சேறு நிறைந்த சாலைகள்மற்றும் தண்ணீர் தேங்கிய பாதைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். யோகா, ஜூம்பா அல்லது ஏரோபிக்ஸ் போன்ற உங்கள் உடலுக்கு ஏற்ற பயிற்சிகளை செய்யலாம். செய்வதற்கு முன் மருத்துவரை கேட்பது நல்லது. கடினமான செயல்களைத் தவிர்க்கவும்
மலேரியா மற்றும் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் இந்த பருவமழையின் அதிகமாக தாக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும். இந்த காலத்தில் நீண்ட கை மற்றும் கால்சட்டைகளை அணியவும். இந்த காலத்தில் தூங்க கொசு வலைகளை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: உடற்பயிற்சிக்கு முன் வாழப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத வலிமைகள்
குறிப்பு: உங்கள் உடல்நலம் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க வழக்கமான சோதனைகள் மிகவும் முக்கியம். உங்கள் சந்திப்புகளைக் கண்காணித்து, உங்களுக்கு காய்ச்சல், கடுமையான தலைவலி அல்லது வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com