உடற்பயிற்சிக்கு முன் வாழப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத வலிமைகள்

வொர்க் அவுட் செய்வதற்கு முன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

reasons to eat a banana before you workout

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும்,உடற்பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட முடியாத பலர் உள்ளனர். அவர்கள் பயிற்சிக்கு முன் அதிக கவனம் செலுத்தாததால் வொர்க் அவுட் முயற்சிகள் பலன் அளிக்காமல் போகிறது. பயிற்சிக்கு முந்தைய தின்பண்டங்கள், பருப்புகள் மற்றும் விதைகள் போன்றவற்றை நீங்கள் உட்கொள்ளலாம்.

அதே போல் வாழைப்பழம் வொர்க் அவுட் முன் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாகும், இது உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இது ஒரு நல்ல தொடக்கமாகும். இது ஆற்றல் ஊக்கியாக செயல்படும் பழமாக கருதப்படுகிறது. உடற்பயிற்சிகளின் போது செயல்திறனை மேம்படுத்துகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் உடற்பயிற்சியின் போது எடையை அதிகரிக்காது. வொர்க்அவுட்டிற்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆற்றல்

girl workout inside

உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. கார்டியோ முதல் எடை பயிற்சி வரை உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. வொர்க்அவுட்டிற்கு முன் வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் அதில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் உடலுக்கு ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை விரைவாகவும் எளிதாகவும் செரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக நீங்கள் வேலை செய்யும் போது ஆற்றலாக உணரவில்லை.

தசை செயல்பாடு மேம்படும்

வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் இருப்பதால் உடற்பயிற்சிக்கு முன் வாழைப்பழங்களை சாப்பிடுவது தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய எலக்ட்ரோலைட் ஆகும். இது தசை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது மற்றும் பிடிப்புகள் தடுக்கிறது. வொர்க்அவுட்டின் போது நீங்கள் அதிகமாக வியர்க்கிறீர்கள் என்றால் இது உங்கள் உடலில் பொட்டாசியத்தை இழக்கச் செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வாழைப்பழங்களை சாப்பிட்டால் அதை நிரப்ப உதவுகிறது.

ஜீரணிக்க எளிதாக இருக்கும்

banana new inside

வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடியவை என்பதால் உடற்பயிற்சிக்கு முந்தைய ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அதேசமயம் உடற்பயிற்சிக்கு முந்தைய பல உணவுகள் அவ்வளவு ஜீரணிக்கக் கூடியவை அல்ல, எனவே அவை உடற்பயிற்சியின் போது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணமாகும் என்பதால் வேலை செய்யும் போது உங்களுக்கு வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது.

நார்ச்சத்து நிறைந்தது

மேலும் படிக்க: ரோஸ்மேரியில் இருக்கும் எண்ணற்ற உடல்நலம் சார்ந்த ஆரோக்கிய நன்மைகள்

வாழைப்பழத்தில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லது. அவை வொர்க்அவுட்டின் போது மெதுவான மற்றும் நிலையான ஆற்றலை வழங்குகின்றன. வாழைப்பழங்களில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளதால் உடலில் திரவ சமநிலையை சீராக்க உதவும் கனிமங்கள் இதில் காணப்படுகின்றாது. வியர்வை மூலம் எலக்ட்ரோலைட்டுகள் இழக்கப்படுகின்றன, அவற்றை சரொசெய்ய வாழைப்பழங்கள் நிரப்பி உதவுகின்றன. இது உடல் வறட்சியைத் தடுக்கவும், உடற்பயிற்சியின் போது செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP