herzindagi
image

வாய் துர்நாற்றத்தால் யாரிடம் பேச முடியவில்லையா? தவிர்க்கும் எளிய வழிமுறைகள் இங்கே!

பற்களைப் பாதுகாக்கவும், வாயில் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தை நீக்கவும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-22, 23:25 IST

வாய் துர்நாற்றம் நம்மில் பலரும் சந்திக்கக்கூடிய பெரும் பிரச்சனைகளில் ஒன்று. கேட்பவர்களுக்கு மட்டுமல்ல, சில நேரங்களில் பேசும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தில் சுளிக்கும் போது பேசுபவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமானது வாய் துர்நாற்றம். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ஏன் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது? என்பது குறித்த எளிய வழிமுறைகள் குறித்து விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

  • நாம் தண்ணீர் அருந்ததாமல் இருக்கும் போது வாய் அடிக்கடி வறண்டு போய்விடுகிறது. இதை மருத்துவர்கள் க்சீரோஸ்டோமியா என்பார்கள். இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கிறது. எனவே அதிக தண்ணீர் அருந்தாமல் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுமாம்.
  • அதிகமாக புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் கொஞ்சம் கூட வாயை மூடாமல் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கு வாய் அடிக்கடி வறண்டு போய்விடும். இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க: அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசத்தைத் தடுக்க சாப்பிடுவதற்கு முன் உருளைக்கிழங்கு சாற்றை இப்படி குடிக்கவும்

  • பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் சஃல்பர் உள்ளது. இதை சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. எனவே பூண்டு, வெங்காயம் சாப்பிட்ட பின்னதாக தண்ணீரால் வாயை நன்கு கொப்பளித்து விட வேண்டும்.
  • பற்களில் இறந்த செல்கள் இருந்தால் தானாக வெளியே வராது. பற்களுக்கு முறையான கவனிப்புக் கொடுக்காத போது, பற்களின் மேற்பரப்பில் பற்காரை ஏற்படும். இதோடு எளுரு வீக்கம், பற்களில் ரத்த கசிவு போன்றவை ஏற்படுவதால் வாய் துர்நாற்றம் அதிகமாகிறது. உடலில் ஏதாவது நோய் பாதிப்புகள் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

தவிர்ப்பது எப்படி?

  • பற்களைப் பாதுகாக்கவும், வாயில் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தை நீக்கவும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் கட்டாயம் பல் துலக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் பற்களில் தங்காமல் இருக்கும். பற்கள் பாதுகாப்பாக இருக்கும் போது வாய் துர்நாற்றம் ஏற்படாது.
  • பற்களுக்கு எந்தளவிற்கு கவனம் செலுத்துகிறீர்களோ? அந்தளவிற்கு நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். பற்களில் படிவது போன்று நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நாக்கிலும் படியக்கூடும். எனவே டங்க் கிளீனர், ப்ரெஸின் பின்புறத்தில் உள்ள சொரசொரப்பான பகுதியைக் கொண்டு நாக்கை ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதோடு நாக்கு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளையும் தடுக்க முடியும்.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 8 உணவுகள் 

  • வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் வாயில் கொப்பளிக்க வேண்டும். இது வாயில் உள்ள புண்களை ஆற்ற உதவும்.
  • தற்போது பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்வதற்கு Floss என்ற கருவி உள்ளது. .இதை வைத்து பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுப்பொருட்களை அகற்றலாம்.

Image source - Freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com