
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த சில உணவுகளை தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். அதற்கான சில உணவுகள் குறித்து இதில் பார்க்கலாம்.
பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மிக சிறந்தவை. வைட்டமின் சி நிறைந்துள்ள இவை, வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. இந்த அணுக்கள் தான் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அல்லிசின் போன்ற கந்தகம் கொண்ட சேர்மங்கள் உள்ளன. இவை இயற்கையாகவே நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றன.

மேலும் படிக்க: Foods for Liver Health: குளிர்காலத்தில் கல்லீரலில் இருந்து நச்சுகளை இயற்கையாக வெளியேற்ற உதவும் 5 உணவுகள் இதோ
தயிர்:
தயிர் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதற்கு காரணம், இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களான புரோபயாடிக்குகள் தான். குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது. சர்க்கரை சேர்க்கப்படாத சுத்தமான தயிரை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அல்லது தொண்டை வலி இருக்கும் நேரத்தில் இஞ்சி தேநீர் இதமான உணர்வை அளிக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு சேர்மம் உள்ளது. இது தொண்டை வலி மற்றும் குமட்டலை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் அன்டிஆக்ஸிடன்ட் பண்புகளும் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
கீரையில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றன. கீரையை எப்போதும் லேசாக வேக வைத்து சாப்பிடவும். இதன் மூலம் அதிக ஊட்டச்சத்துகளை உடல் பெற்றுக் கொள்ள முடியும்.
கிரீன் டீயின் மூலம் நோய் தொற்றுகளை தடுக்க முடியும். இதில் ஃப்ளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. இது நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் சேர்மங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும். இதற்காக தினமும் சில பாதாம் பருப்புகளை எடுத்துக் கொண்டால் கூட போதுமானது.
இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்படுத்தலாம். எனினும், புதிதாக எந்தவொரு உணவையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com