herzindagi
back pain home remedies..

முதுகு வலியைப் போக்க இந்த பயிற்சிகளை மட்டும் செய்யுங்க போதும்!

<span style="text-align: justify;">அதீக முதுகு வலி ஏற்படும் இடத்தில் சுடு தண்ணீர் அல்லது ஐஸ் கட்டியை வைத்து குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு ஒத்தனம் கொடுக்கவும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-08-12, 20:28 IST

ஆண்கள் முதல் பெண்கள் வரை என்றாவது ஒரு நாள் நிச்சயம் அதீத முதுகுவலியால் அவதிப்பட்டிருப்போம். என்ன தான் இதற்காக வலி நிவாரணிகள் பயன்படுத்தினாலும் தற்சமயத்திற்கு மட்டுமே அந்த வலியைப் போக்க முடியும். நிரந்தர தீர்வு என்பது அவ்வளவு எளிதல்ல. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதீத முதுகுவலியால் அவதிப்படுவார்கள்.அதிலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்ற பெண்கள் பல மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்வதற்கும், தொடர்ச்சியாக வேலைப் பார்ப்பதற்கும் பெரும் சிரமத்தைச் சந்திப்பார்கள். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பிஸியோதெரபி போன்றவற்றை மேற்கொள்வார்கள். இந்த வரிசையில் முதுகு வலி பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சில உடற்பயிற்சிகளை ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.

back pain problem

மேலும் படிக்க: அடிக்கிற குளிருக்கு உடலை சூடாக வைத்திருக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்க!

முதுகு வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள்:

நேராக உட்காரவும்: முதுகு வலி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றால், முதலில் இடுப்பு மற்றும் முதுகுத் தண்டின் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.  உங்களது அன்றாட வாழ்க்கை முறைகளில் சில நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நேராக அமர்ந்து உட்காருதல், எந்த வேலையைப் பார்த்தாலும் நிமிர்ந்து உட்கார வேண்டும். அலுவலக வேலைக்காக கணினி முன்பாக அமரும் போது, நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்தாலும் இதைப் பின்பற்றவும். 

உடற்பயிற்சி: முதுகு வலி ஏற்படும் போதெல்லாம் உடல் எடையைக் குறைக்கவும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள். இதெல்லாம் முட்டாள்தனமாக தோன்றினாலும் அதீத முதுகுவலியைக் குறைப்பதற்கு சரியான தசை இயக்கம் கட்டாயம் தேவை. குனிந்து நிமிர்வது, இடுப்பு பகுதியை வலது மற்றும் இடது புறம் திருப்பி உடற்பயிற்சி செய்யவும். இவ்வாறு மேற்கொள்வது முதுகெலும்பைச் சுற்றியுள்ள உங்களது தசைகளை வலுவாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

யோகா மற்றும் தியானம்: முதுகு வலிக்கு உடற்பயிற்சிகள் செய்வது ஒருபுறம் தீர்வாக அமைந்தாலும் உடலின் மனம் மற்றும் உடல் செயல்பாடுகளில் எப்போதும் அதீக கவனம் செலுத்த வேண்டும். ஆய்வுகளின் படி, முதுகு வலிக்கு தீர்வாக கொஞ்ச நேரம் யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது.

நீச்சல்: நீரில் செய்யக்கூடிய நீச்சல் பயிற்சிகள் முதுகுவலி பிரச்சனைகளைப் போக்க உதவும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளை எரிக்க உதவியாக உள்ளது.  மேலும் தசைகளையும் வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க: நம்மை ஒருவழியாக்கும் மழைக்கால ஒற்றை தலைவலியை போக்கும் வழிகள் 

massage

சுடு தண்ணீர் அல்லது ஐஸ் ஒத்தனம்:

அதீக முதுகு வலி ஏற்படும் இடத்தில் சுடு தண்ணீர் அல்லது ஐஸ் கட்டியை வைத்து குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு ஒத்தனம் கொடுக்கவும். 

Image source - Google 

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com