அடிக்கிற குளிருக்கு உடலை சூடாக வைத்திருக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்க!

இரவு நேரங்களில் அதீத குளிர் ஏற்படும் சமயத்தில் போர்வை, கம்பளி, ஸ்வெட்டர்  போன்றவற்றைப் பயன்படுத்தவும்.

stay warm in winter...

தென்மேற்கு பருவ மழையால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. காலை வேளையில் லேசாக வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழல் அமைகிறது. இதனால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பருவ கால நோய்த் தொற்றுகள், செரிமானம் முதல் தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருப்பதன் மூலம், பல நோய்களைக் குணப்படுத்த முடியும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், என்னென்ன வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

monsoon season

குளிர்காலத்தில் உடல் சூட்டை அதிகரிப்பதற்கான டிப்ஸ்கள்:

குளிர்காலத்தில் உடல் சூடாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் அறையின் வெப்பநிலை சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக குளிர்காலத்தில் உங்களது படுக்கை அறையில் கேம் பயர் அதாவது நெருப்பு அல்லது ஹீட்டர் பயன்படுத்தினால் சூடாக இருக்கும். இருந்தாலும் காற்றோட்டம் அவசியம் என்பதால் இதற்காக இரவு நேரத்தில் ஜன்னல் அல்லது கதவை சிறிது திறந்து வைக்கவும். குளிர்ந்த சூழலில் எப்போது வெளியில் சென்றாலும் கோட், தொப்பி, கையுறைகள் மற்றும் சூ அல்லது பூட்ஸ் போன்ற காலணிகளை அணிந்து கொள்வது நல்லது.

பருவகாலத்தில் ஏற்படக்கூடிய குளிரைத் தவிர்க்க வேண்டும் என்றால் உணவு முறையிலும் கொஞ்சம் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிடும் போது உங்களது உணவை சூடாக சாப்பிட முயற்சி செய்யுங்கள். சூடாக சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் சமச்சீராக மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும். உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு பருவ காலத்தில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்த உதவியாக இருக்கும்.

குளிர்காலம் வந்தாலே வழக்கமான செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு பலர் தயக்கம் காட்டுவார்கள். சளி மற்றும் இருமல் பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக நடைபயிற்சி , ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:மழைக்காலத்தில் ஏற்படும் ஃபுட் பாய்சன் பிரச்சனையை குணப்படுத்த உதவும் சில டிப்ஸ் இதோ..!

body warm in winter

ஒரிரு நாட்களில் வானிலை கொஞ்சம் மாறுபாடு மற்றும் வெளியில் செல்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டால் அன்றைய நாளில் வெளியில் செல்ல வேண்டாம். அதற்கு மாற்றாக இந்த அனைத்துப் பணிகளையும் வீட்டில் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த நடைமுறைகள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். இரவு நேரங்களில் அதீத குளிர் ஏற்படும் சமயத்தில் போர்வை, கம்பளி, ஸ்வெட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP