
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் வெற்றிபெற சிறப்பான தொடர்பு திறன் அவசியம் ஆகும். பேசுவது மட்டுமல்லாமல், மற்றவர்கள் சொல்வதை கவனிப்பது, நமது எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துவது என பல அம்சங்கள் இதில் அடங்கும்.
இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்ள நீங்கள் தினசரி கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இதில் பார்க்கலாம். இவை உங்கள் வாழ்க்கையை அனைத்து வகையிலும் மேம்படுத்த உதவியாக இருக்கும்.
ஒரு உரையாடலில், பேசுபவரை முழுமையாக கவனிப்பதே மிக முக்கியமான திறன். பேசும் நபர் மீது முழு கவனம் செலுத்துங்கள். அவர்கள் பேசி முடிக்கும் முன் இடையில் நீங்கள் பேசுவதை தவிர்க்கவும். நீங்கள் கேட்டதை உள்வாங்கி கொண்டு, யோசித்துத் திறமையாக பதிலளிக்கவும். இது, நீங்கள் உண்மையிலேயே ஆர்வத்துடன் கேட்கிறீர்கள் என்பதை எடுத்துக் காட்டும்.
அவசரத்தில் பேசுவதை தவிர்க்க பழகுங்கள். நீங்கள் பேசுவதற்கு முன் நிதானமாக உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் கருத்துகளை தெளிவாகவும், சுருக்கமாகவும் வெளிப்படுத்த பழகுங்கள். இது குழப்பத்தை தவிர்க்க உங்களுக்கு உதவும்.

மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
ஒருவருடன் பேசும் போது கண்களை பார்த்து பேசுவது மிகவும் முக்கியம். இது உங்களை தன்னம்பிக்கை உடையவராகவும், கவனத்துடன் கேட்கிறீர்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் நம்பிக்கை மற்றும் பிணைப்பை உங்களால் எளிதாக உருவாக்க முடியும்.
மேலும் படிக்க: How to create AI saree pictures with Gemini: இணையத்தை கலக்கும் ஜெமினி ஏ.ஐ புகைப்படங்களை உருவாக்குவது எப்படி? தெளிவான விளக்கம் இதோ
உங்கள் வார்த்தைகளை உங்களுடைய உடல் மொழியும் வலுப்படுத்த வேண்டும். எதையும் மறைக்காமல், திறந்த மற்றும் நேர்மறையான உடல் அசைவுகள் மற்றும் தோரணையை பயன்படுத்துங்கள். கைகளை கட்டிக் கொள்வது, முகத்தை திருப்பி பேசுவது போன்ற எதிர்மறையான நடவடிக்கைகளை தவிர்ப்பது, உங்கள் கருத்துகளை மக்கள் அணுகுவதற்கு எளிதாக்கும்.
புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்வது உங்கள் கருத்துகளை இன்னும் துல்லியமாக வெளிப்படுத்த உதவும். தினசரி புதிய வார்த்தைகளை படிக்கவும், கற்றுக்கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளுங்கள். சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவது, உங்கள் எண்ணங்களை அதிக திறம்பட தெரிவிக்க உதவும்.

உரையாடலை சுவாரஸ்யமாகவும், ஆழமானதாகவும் மாற்றுவதற்கு கேள்விகள் உதவும். உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக கேள்விகள் கேளுங்கள். மற்றவர்களின் கருத்துகளில் ஆர்வம் காட்டுவது, உரையாடலில் ஈடுபாட்டை அதிகரித்து, அவர்கள் சொல்வதை புரிந்துகொள்ள உதவுகிறது.
இறுதியாக, மற்றவர்களின் உணர்வுகளுக்கும், கண்ணோட்டங்களுக்கும் மதிப்பளிப்பது மிகவும் அவசியம். மற்றவர்கள் பேசுவதை அவர்களின் நிலையில் இருந்து புரிந்து கொள்ளவும், மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் உங்களது தொடர்பு கொள்ளும் திறன் நிச்சயம் மேம்படும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com