herzindagi
walking wight loss big image

நடைப்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்க எளிய வழிகள்

ஆரோக்கியமாக இருக்கவும் உடல் எடையை குறைக்கவும் ஒருவர் தினமும் எத்தனை படிகள் நடக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த கட்டுரையை படிக்கவும்
Editorial
Updated:- 2024-05-21, 15:18 IST

ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும், எதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான விஷயங்களை நீங்கள் கேட்கலாம் மற்றும். உண்மையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லது எடை குறைக்க வேண்டும் என்றால் சரியான உணவுப் பழக்கம் மற்றும் வழக்கமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருப்பது அல்லது அதிகரித்து வரும் உங்கள் எடையை அலட்சியம் செய்வது உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இருப்பினும் எடை இழக்க தேவையான படிகளின் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தினமும் எத்தனை அடிகள் நடப்பதன் மூலம் பெண்கள் உடல் எடையை குறைத்து தங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதை நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவலை யோகா நிபுணர் நடாஷா கபூர் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க: கோடைக்கால தலைவலி தொந்தரவை போக்க உதவும் சூப்பர் இலை

உடல் எடையைக் குறைக்கத் தினமும் எத்தனை படிகள் நடக்க வேண்டும்? 

  • ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் பெண்கள் தங்கள் வழக்கமான நடைப்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டாம்.

walking inside

  • நிபுணர்களின் கூற்றுப்படி தினமும் 2000 படிகள் நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் குறைந்தது 10,000 படிகள் நடக்கவும்.
  • தினமும் 10,000 படிகள் நடப்பதன் மூலம் சுமார் 400 கலோரிகள் எரிக்கப்படும். இருப்பினும் இது அனைவருக்கும் வித்தியாசமாக இருக்கலாம்.
  • இதனால் உடல் எடை குறைவது மட்டுமின்றி சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
  • தினமும் 10,000 படிகள் நடப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும் மற்றும் உடலில் ஹார்மோன் சமநிலை பராமரிக்கப்படும்.
  • உங்களால் தொடர்ந்து 10000 படிகள் நடக்க முடியாவிட்டால் என்றால் இந்த இலக்கை பாதியாக பிரித்துக்கொண்டு செய்யலாம்.

walking steps inside

  • நீங்கள் நடைப்பிற்சியை வேகமான நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அதை உங்கள் சாதாரண வேகத்தில் நடந்து முடிக்கலாம்.
  • ஆரம்பத்தில் 1000 முதல் 2000 படிகள் வரை நடக்க தொடங்கி பின்னர் படிப்படியாக அதிகரிக்கவும்.
  • ஃபோனில் பேசிக்கொண்டே நடக்கலாம் அல்லது லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம்.
  • இந்த சிறிய பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் நன்மை பயக்கும்.
  • இதனுடன் உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த எண்ணெய் பற்றி தெரியுமா?

நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றினாலோ வெறும் நடைப்பயிற்சியால் உங்கள் எடை குறைக்க முடியாது.

நடைப்பயிற்சி ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.  இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit- Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com