வாதம், பித்தம், கபம் இந்த மூன்று விஷயமும் உடலில் மிக முக்கியமான ஒன்று. நம்மில் பலருக்கு திடீரென பாதம் அதிகரிப்பு பித்தம் அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது. வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவை உடலில் அதிகரிக்கும் போது நம் உடல் மற்றும் மனம் சாதாரண நிலையில் இருக்காது. நம் உடலில் பித்தம் எவ்வாறு அதிகரிக்கிறது? அதை எப்படி கண்டுபிடிப்பது என நமக்கு பல கேள்விகள் உள்ளன. நம் முன்னோர்கள் கூறியபடி உடம்பில் திடீரென ரொம்ப அதிக சூடு உருவாகினாள் பித்தம் அதிகரித்து இருக்கிறது என்று கூறுவார்கள். அதேபோல் நாம் எண்ணங்களில் பேச்சுக்களில் அதீத நிலை மாற்றங்கள் இருந்தால் நாம் சரியாக தூங்காமல் இருந்தால் நம் உடலில் பித்தம் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
மேலும் படிக்க: எப்போதும் எதுக்களிப்பு, நெஞ்செரிச்சலா? காரணம் என்ன? ஒரு நொடியில் சரியாக இயற்கையான தீர்வு
திடீரென நிறைய கோபம் வருவது, சின்ன சின்ன விஷயங்களுக்கு ஆக்ரோசப்படுவது, திடீரென படபடப்பாகும் போது நம் உடலில் பித்தம் அதிகரிக்கிறது என்று உணரலாம். பித்தம் அதிகரிக்கும்போது உடல் அளவிலும் மனதளவிலும் நிறைய அறிகுறிகளை காட்டும். பித்தம் அதிகரிக்கும்போது முதலாவதாக நமக்கு செரிமான கோளாறுகளை உண்டு பண்ணும். பித்தம் சமநிலையில் உள்ள போது நாம் பேலன்ஸ் ஆன கண்டிஷனில் இருப்போம். நம்முடைய செரிமானம் ஆரோக்கியமாக இருந்தால் பித்தமும் சமநிலையில் உள்ளது என்று அர்த்தம்.
செரிமானம் பாதிப்படையும்போது பித்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். பித்தம் அதிகரிக்கும் போது அசிடிட்டி சம்பந்தமான பிரச்சனைகளோ, அஜீரண கோளாறுகளோ, வயிற்றில் எப்போதும் ஒரு அசௌகரியம் வந்து கொண்டே இருக்கும். உடலில் பித்தம் அதிகரிக்கும் போது தலைசுற்றல் வரும். மற்றும் உதடுகளில் வெடிப்பு தோன்றும். காலையில் பல் துலக்கும் போது குமட்டல் வரும். அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு தோன்றும்.
வாத பித்த கபம் இந்த மூன்று விஷயமும் உடலில் மிக முக்கியமான ஒன்று நம்மில் பலருக்கு திடீரென பாதம் அதிகரிப்பு பித்தம் அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.
அடுப்பில் 200ml தண்ணீரை கொதிக்க வைத்து கருப்பு உலர் திராட்சை 10, கொத்தமல்லி இலை 2 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை சிறிது,இஞ்சி 2 டீஸ்பூன் இடித்து சேர்த்துகொள்ளுங்கள். புதினா இலை 2 டேபிள்ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொத்திக்க வைத்து 100 ml வந்தவுடன் அதனை வடிகட்டி வாரத்தில் 2 நாட்கள் எடுத்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து தினமும் காலையில் எழுந்தவுடன் தலைக்கு குளிக்க வேண்டும். குறிப்பாக நல்லெண்ணையை தலையில் தேய்த்து ஊற விட்டு இன்று தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் உடல் சூட்டை குறைக்க முடியும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் பித்தத்தின் அதிகரிப்பை தடுத்து நிறுத்தி உடலில் எப்போதும் பித்தத்தின் அளவை நார்மலாக வைத்துக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க: வெகு நாட்களாக குடலில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் ஆயுர்வேத பானங்கள்'
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com