Bad Breath: வாய் துர்நாற்றத்தால் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான எளிய முறை!

வாய் துர்நாற்றத்தால் சங்கடத்தை சந்திக்க நேரிட்டால்  இன்றிலிருந்து இந்த வீட்டு வைத்தியத்தை கடைபிடித்து வாய் துர்நாற்றத்தை போக்குங்கள்.

mouth problem
mouth problem

வாய் துர்நாற்றம் இருந்தால் யாரும் நம்மிடம் உட்கார விரும்ப மாட்டார்கள் பேசுவதை கூட தவிற்பார்கள். மீண்டும் மீண்டும் சங்கடப்பட வேண்டிய நிலையாக இருக்கும். உணவைத் தவிர சில நோய்களும் இதற்குக் காரணமாகின்றன. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல எளிதாக அகற்றலாம். ஆனால் முதலில் நாம் வாய் துர்நாற்றத்திற்கான காரணங்களைப் பற்றி அறிவோம்.

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்

  • செரிமான அமைப்பில் ஏற்படும் இடையூறுகளால் வாயில் வாசனை வீசத் தொடங்குகிறது. உண்மையில் நாம் சாப்பிடும் சாறு குடலில் அழுகத் தொடங்குகிறது மற்றும் வாய் வாசனை தொடங்குகிறது.
  • துர்நாற்றம் என்பது பல் சொத்தை, பையோரியா அல்லது பற்களில் இருக்கும் பிற நோய்களால் ஏற்படுகிறது.
  • மலச்சிக்கலும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
  • உடலில் நீர்ச்சத்து இல்லாததாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.
  • இறைச்சி, மது, வெங்காயம், பூண்டு சாப்பிட்டாலும் வாய் நாற்றம் அடிக்கும்.
  • சர்க்கரை நோய் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றத்தால் சங்கடத்தை சந்திக்க நேரிட்டால் சில வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வாய் மற்றும் சுவாசத்தின் துர்நாற்றத்தை அகற்றுவது மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுவதும் குறையும்.

ஏலக்காய் மற்றும் பெருஞ்சீரகம்

cardamon mouth

வாய் துர்நாற்றம் இருந்தால் ஏலக்காயை ஒரு நாளைக்கு பல முறை மென்று சாப்பிட வேண்டும். வெங்காயம், பூண்டு சாப்பிட்ட பிறகு ஏலக்காய் சாப்பிட்டால் வாசனை வராது. இதனுடன் பெருஞ்சீரகம் மெல்லுவதால் வாயில் உள்ள துர்நாற்றமும் நீங்கும். செரிமான அமைப்பில் மோசமாடைவதால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டால். உணவுக்குப் பிறகு இரண்டு முறை அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து மசாஜ் செய்யவும்

musteded

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து மசாஜ் செய்வதால் வாயின் துர்நாற்றம் சில நாட்களில் போய்விடும். கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து ஈறுகளை தினமும் ஒரு முறை மசாஜ் செய்வது ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், வாய் துர்நாற்றத்தின் அபாயத்தையும் குறைக்கும். முற்காலத்தில் நம் பெரியவர்கள் கடுகு எண்ணெய் மற்றும் உப்பு கலந்து பற்களை சுத்தம் செய்வார்கள்.

எலுமிச்சை அதிசயம்

எலுமிச்சை உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. தினமும் காலையில் 1 கிளாஸ் தண்ணீரில் 1 எலுமிச்சையை பிழிந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும். பின் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். சுறுசுறுப்பான மற்றும் ஆக்கிரமிப்பு பாக்டீரியாவைக் கொன்று வாயை சுத்தம் செய்ய எலுமிச்சை உமிழ்நீர் சுரப்பிக்கு உதவுகிறது. வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நாக்கில் வெள்ளை படலமும் கூட காரணம். இந்த சாறு இயற்கையான முறையில் வாய் துர்நாற்றத்தை போக்க திறம்பட செயல்படுகிறது.

கிராம்பு மந்திரம்

clove mouth

பற்களில் வலி ஏற்படும் போது பற்களில் கிராம்புகளை அழுத்துவார்கள். மேலும் கிராம்பை பற்களில் சிறிது நேரம் அழுத்தினால் பற்கலுக்கு நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் காரணமாக நிகழ்கிறது. இதுவும் பல்வலிக்கு அருமருந்து. இதனுடன் கிராம்புகளை வாயில் உறிஞ்சுவதும் துர்நாற்றத்தை குறைக்கிறது.

பச்சை தேயிலை தேநீர்

green tea mouth

கிரீன் டீயை பயன்படுத்துவதன் மூலம் வாய் துர்நாற்றம் குறையும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. க்ரீன் டீ வாய் துர்நாற்றத்தை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கிரீன் டீ குடிப்பது வாய் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல் வாய் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் இருக்கும் அனைத்து விதமான நோய்களுக்கு தீர்வை தரும் ஆயுர்வேத பானம்

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP