இன்றைக்கு மாறிவரும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் அனைத்தும் பல வகைகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. இதோடு பல உடல் நல பாதிப்புகளையும் நமக்கு பரிசாக அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக உணவு பழக்க மாற்றங்களால் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழங்கால விளையாட்டுகளான ஸ்கிப்பிங் தான் அவர்களின் முதல் தேர்வாக உள்ளது.
இவ்வாறு அதிகரித்த எடையைக் குறைப்பதற்கு மட்டுமின்றி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்க உதவுகிறது. இதோ நவீன காலத்தில் மறைந்து போன விளையாட்டுகளில் ஒன்றாக ஸ்கிப்பிங் அதாவது கயிறு குதித்தல் போன்ற விளையாட்டுகள் எப்படி உடலுக்கு ஆற்றலை அளிக்கின்றது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்; வீட்டிலேயே பரிசோதிக்கும் முறை!
காலை அல்லது மாலை வேளைகளில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஸ்கிப்பிங் விளையாடுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளைப் படிப்படியாக குறைக்க முடியும். குறிப்பாக உடல் பருமன் உள்ள பெண்கள் ஸ்கிப்பிங் விளையாடினால் உடனே எடை குறைந்து விட முடியும் என்று நினைப்பது தவறான செயல். இதற்காக அதிக விளையாடுவதன் மூலம் குதிகால் வலி. கால் வலி, முழங்கால் வலி போன்ற பல்வேறு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தொடர்ச்சியாக ஸ்கிப்பிங் விளையாடுவதன் மூலம் வலுவடைந்த பெண்கள் உறுதியாக மாறக்கூடும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் உடலில் இருந்து கரையும் போது கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதற்கு வாயப்ப்பில்லை. இதனால் இதய நோய் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
குதித்து குதித்து ஸ்கிப்பிங் ஆடும் போது, உடலில் உள்ள அனைத்து தசைகளும் வலுப்பெறுகிறது. இதோடு வயிற்றில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் இறுக்கமாகி, தொப்பையை எளிதாக கரைக்க உதவுகிறது. ஒரே நாளில் குறைந்து விடும் என்று நினைப்பது தவறான செயல். எப்படி நாம் நம் வாழ்க்கையில் அன்றாட பழக்க வழக்கங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்கிறோமோ? அதைப் போன்று தான் ஸ்கிப்பிங்கை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். தினமும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு மேல் செய்ய தேவையில்லை. குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு செய்தால் மட்டும் போதும்.
வயதானக் காலத்தில் கால்களில் ஏற்படக்கூடிய வலியையும் குறைப்பதற்கு ஸ்கிப்பிங் மேற்கொள்வது மிக சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக இருக்கும். எனவே எவ்வித தடங்கல் வந்தாலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால், தொடர்ச்சியாக ஸ்கிப்பிங் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com