
முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சலூன் அல்லது அழகு நிலையங்களுக்கு செல்வது பலருக்கு ஒரு சவாலான அனுபவமாக இருக்கலாம். நவீன முறைகளில் பல கருவிகள் இருந்தாலும், இயற்கையான, பக்கவிளைவுகள் இல்லாத வழிகளை நாடுவோரின் எண்ணிக்கை இன்றும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் வீட்டு வைத்திய முறையில் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை எவ்வாறு அகற்றலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
கோதுமை மாவு, மஞ்சள் மற்றும் நெய் கலவை, முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும். இதை முகத்தில் மெதுவாக தேய்க்கும் போது, அது நுண்ணிய முடிகள் மற்றும் இறந்த சரும செல்கள் நீக்குகிறது. இதை தினசரி பயன்படுத்துவது உகந்ததல்ல என்றாலும், வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தும் போது சிறந்த பலன் கிடைக்கும். எந்தவொரு புதிய முறையையும் முகத்தில் முழுவதும் பயன்படுத்துவதற்கு முன், ஒரு சிறிய பகுதியில் பரிசோதித்து பார்ப்பது நல்லது.
கடலை மாவு, சருமத்தை சுத்தப்படுத்துவதில் சிறந்தது என பலருக்கு தெரியும். இதனுடன் பன்னீர் கலக்கும் போது, அது முடி வளர்ச்சியை தாமதப்படுத்த உதவுகிறது. 2 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி பன்னீர் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து ஒரு பசையாக கலக்கவும். இதை முகத்தில் தடவி, காய்ந்ததும் விரல்களால் மெதுவாக தேய்த்து அகற்றவும். இந்த முறையை வாரத்திற்கு நான்கு முறை பின்பற்றலாம்.

சர்க்கரை, சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தேவையற்ற முடிகளை அகற்றும். தேன், சருமத்தை மென்மையாக்கி, ஊட்டமளிக்கும். இந்த கலவை முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு மிகவும் சிறந்தது. ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை உருகும் வரை இதனை நன்கு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யலாம். இவை முற்றிலும் காய்ந்த பின்னர் கழுவி விடலாம்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு போன்ற பொருட்கள் சருமத்தை பிரகாசமாக்கும். இதனுடன், பாசிப்பயிறு மாவு சேர்ப்பது முகத்தில் முடியை அகற்ற உதவுகிறது. உருளைக்கிழங்கை துருவி, அதன் சாறை பிழிந்து எடுக்கவும். அத்துடன் பாசிப்பயிறு மாவு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து ஒரு மெல்லிய பசையை உருவாக்கவும். இதை முகத்தில் தடவி விட்டு காய்ந்த பின்னர் அகற்றி விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றவும்.

முதலில் பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை நன்றாக மசித்து பசை போல் மாற்ற வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். முடி வளரும் பகுதிகளில் இதைத் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினால் தேவையற்ற முடி படிப்படியாக நீங்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com