கால் நக பூஞ்சை தொற்றால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான இயற்கை வைத்தியம் இங்கே

எவ்வித வலியும் இல்லாமல் கால் விரல் நகங்கள் பூஞ்சைத் தொற்று காரணமாக தானாகவே உடைந்து விடும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு அதிகமாக கால் நக பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது
image
image

கை, மற்றும் கால்களில் விரல்களுக்கு அழகு சேர்ப்பது நம்முடைய நகங்கள். கை விரல்களை வெட்டும் போது கொஞ்சம் தசையை சேர்த்து வெட்டினாலே ஒரிரு தினங்களுக்கு அதன் வலியை அனுபவிப்போம். அதுவே கால் நகங்களில் அடிபட்டால் ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பட்ட இடத்திலே படும் என்பதற்கு ஏற்ப அடிபட்ட இடத்திலேயே மீண்டும் மீண்டும் அடிபட்டு நக கண்கள் ஆறுவதற்கு பல மாதங்கள் எடுக்கும். சில நேரங்களில் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டு நகங்கள் விழுவதும் உண்டு. இதை எளிய முறையில் வீட்டிலேயே சரி செய்ய முடியும்.

கால் நக பூஞ்சை தொற்று பாதிப்பு:

கால் விரல்கள் மீது கனமானப் பொருட்கள் விழுந்தால் நகங்களில் இரத்தம் கட்டுவதோடு அது உடைந்து விடக்கூடும். பல நேரங்களில் எவ்வித வலியும் இல்லாம் கால் விரல் நகங்கள் பூஞ்சைத் தொற்று காரணமாக தானாகவே உடைந்து விடும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு அதிகமாக கால் நக பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக வீட்டிலேயே சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றலாம்.

  • கால் பூஞ்சைத் தொற்றை சரிசெய்வதற்கு வீட்டில் எளிதாக கிடைக்கும் எலுமிச்சை மற்றும் பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி சரி செய்யலாம்.
  • முதலில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்துக் கொள்ளவும்.
  • இரண்டு பூண்டு பற்களை இடித்து வைத்துக் கொள்ளவும்.
  • இவை இரண்டையும் ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றியதோடு இதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் போன்று கலந்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:உங்களது நாளை தக்காளி ஜூஸ்வுடன் தொடங்கினால் போதும் வியக்கத்தகு நன்மைகள் காத்திருக்கு!

  • கால்களை நன்கு சுத்தம் செய்து உலர்த்திய பின்னதாக இந்த கலவையை நகத்தில் தடவிக் கொள்ளவும்.
  • அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்துவிட்டு குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும். வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயம் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சியும், பூண்டு பற்களில் உள்ள அலிசின் போன்றவை பூஞ்சைகள் வளர்வதைத் தடுக்கிறது. எனவே ஆரோக்கியமான முறையில் கால் பூஞ்சை தொற்றை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த சிகிச்சையை ஒரு முறையாவது பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க:செரிமானம் முதல் சரும பிரச்சனைகளை சரி செய்யும் அற்புதம் கொண்ட கொய்யா இலைகள்

கவனிக்க வேண்டியவை:

இதுபோன்ற எளிய சிகிச்சை முறையின் மூலமாகவும் கால் நக பூஞ்சை தொற்றுகளைக் குணமாக்க முடியும். ஆனால் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களாக இருந்தால் புண் சிறியதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையென்றால் புண்கள் கால் நகங்களில் புரையோடி விரல்களை வெட்டும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP