உங்களது நாளை தக்காளி ஜூஸ்வுடன் தொடங்கினால் போதும் வியக்கத்தகு நன்மைகள் காத்திருக்கு!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தக்காளியைக் கொண்டு செய்யப்படும் ஜூஸ் குடிக்கும் போது நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, உடல் எடையை நிர்வகித்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்
image
image

நமது சமையல் அறையில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக உள்ளது தக்காளி. முன்பெல்லாம் தக்காளி சமைக்காமல் சாப்பிட்டதால் தானோ நம்முடைய முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே மாறிவிட்டது. தக்காளி சமைத்துக் கொடுத்தால் கூட தட்டில் இருந்து குழந்தைகள் ஒதுக்கி வைக்கிறார்கள். இதனால் இளம் வயதிலேயே பல உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு தக்காளியை ஜூஸாக செய்து பருகுவது தான் நல்ல தீர்வாக அமைகிறது. அதுவும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தக்காளி குடிப்பதால் பல நன்மைகளைப் பெற முடியும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • காலையில் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிக்கும் போது, நாள் முழுவதும் உடல் சோர்வின்றி புத்துணர்ச்சியாக இருக்க முடியும். உடலுக்குத் தேவையான அத்துணை ஊட்டச்சத்துக்களையும் எளிதில் பெறும் அளவிற்கு ஆற்றல் கொண்டதாக உள்ளது தக்காளி. இதில் வைட்டமின் சி, போலேட், லைகோபீன், மினரல், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தைத் தருகிறது.

மேலும் படிக்க:நார்ச்சத்து முதல் வைட்டமின்கள் வரை; கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 வகையான காய்கறிகள்

  • காலை எழுந்ததும் டீ குடிப்பதற்குப் பதிலாக தக்காளியைப் பருகும் போது உடலுக்குத் தேவைப்படக்கூடிய பொட்டாஸியம் கிடைப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
  • ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிக்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் பருவகால நோய்த் தொற்றுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தக்காளியைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
  • தக்காளியில் அதிகளவு நீர்ச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடலின் செரிமான அமைப்பை சீராக்குகிறது. உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை என்பது மக்களிடம் அதிகமாகிவிட்டது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் காலையில் எழுந்தவுடன் கட்டாயம் தக்காளி ஜூஸ் குடிப்பது நல்லது.

மேலும் படிக்க:இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்

  • எந்தளவிற்கு உடலின் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதோ? அந்தளவிற்கு உடல் எடையானது படிப்படியாக குறையக்கூடும். எனவே நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த தக்காளியைக் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள குறைவான கலோரிகளும் உடல் எடையக் குறைக்க உதவுகிறது.
  • தக்காளி சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. உடலில் தங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து நாள் முழுவதும் உடலை ஆற்றலும் வைத்திருக்க உதவுகிறது.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP