
உலக தூக்க தினம் என்பது உலக தூக்க சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். இது தூக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் தூக்க கோளாறுகளைத் தடுப்பது, நிர்வகிப்பது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கிறது. போதிய தூக்கமின்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும்.
நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாடு, வளர்சிதை மாற்றம், ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் இருதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு போதுமான தூக்கம் மிகவும் அவசியமானது. நீங்கள் தினமும் போதுமான நேரம் தூங்காவிட்டால் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகலாம்.

சிறந்த அறிவாற்றல் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சரியாக தூங்காத பட்சத்தில் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம். தினமும் நீங்கள் போதுமான நேரம் தூங்கவில்லை என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
இரவில் போதுமான நேரம் தூங்கிவிட்டோம் என நினைத்தாலும் பகலில் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது போதுமான தூக்கமின்மையின் பொதுவான அறிகுறியாகும். மேலும் செய்தித்தாழ் வாசிப்பது, தொலைக்காட்சி பார்க்கும் போது கண்கள் விழித்திருப்பதில் சிரமமாக இருக்கும். நீங்கள் தூங்கி விழவும் வாய்ப்புண்டு.
தூக்கமின்மை அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கலாம். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும் போது அதில் முழு கவனத்தை செலுத்த முடியாமல் போகலாம். நீங்கள் காலையில் விழித்திருக்கும் போது அன்றாட பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கலாம். இது உங்களின் உற்பத்தித்திறனை குறைக்கும்.
தூக்கமின்மை மனநிலையை கணிசமாக பாதிக்கும். இதனால் நீங்கள் எளிதாக விரக்தியடைவது அல்லது உணர்ச்சி ரீதியாக எதிர்வினையாற்றுவதை காணலாம்.
மேலும் படிங்க இரவில் தூங்க முடியவில்லையா ? நன்றாக தூங்குவதற்கு இந்த குறிப்புகள் உதவும்!
நீங்கள் போதுமான நேரம் தூங்காமல் வாகனத்தை இயக்கி பயணிக்கும் போது திடீரென உங்களை அறியாமலேயே கண்களை மூடிவிடுவீர்கள். இதனால் விபத்துகள் ஏற்பட்டு அடிபடக் கூடும்.
தூக்கமின்மை ஹார்மோன்களின் ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது. இது பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. செரிமான பிரச்சினைகள் உண்டாகி நீங்கள் அதிகளவு உணவுகளை உட்கொள்ள நேரிடும். காலப்போக்கில் இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் எட்டு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது நோயெதிர்ப்பு செயல்பாட்டைப் பலவீனப்படுத்தலாம். இதனால் சாதாரணமான சளி மற்றும் பிற நோய்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படலாம்.
தூக்கமின்மை உணர்ச்சி ஒழுங்குமுறையை பாதிக்கலாம். சிறிய வேலையாக இருந்தாலும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பிறரிடம் பதிலளிக்ககூடும். மன அழுத்தம் அதிகரித்து கொண்டே இருக்கும். அன்றாடச் சவால்களை எதிர்கொள்வதே உங்களுக்கு கடும் சிரமமாக இருக்கும்.
மேலும் படிங்க மன பதற்றத்தை தவிர்ப்பதற்கான எட்டு முக்கிய குறிப்புகள்!
போதுமான தூக்கமின்மை உங்களுக்கு அதிக தலைவலியை உண்டாக்கும். நீங்கள் சரியாக தூங்காத வரை தலைவலி தொடரும் மற்றும் மருந்துகளால் கூட இதை சரி செய்ய முடியாது.
தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை தோல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது வறட்சி மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கும். உங்கள் தோலில் கருமையான வட்டங்கள் மற்றும் பிரகாசமின்மையை நீங்கள் கவனிக்கலாம்.
போதுமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தலாம். இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com