
எதற்கெடுத்தாலும் கவலை கொள்வது, அச்சப்படுவது, பதற்றமடைவது ஒரு மனிதனின் வாழ்வில் அமைதியை சீர்குலைத்துவிடும். கடினமான சூழல்களில் சிக்கும் போது அதிலிருந்து எப்படி விடுபட போகிறோம் என மனிதர்கள் பயப்படுவது இயல்பானது. ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் பயப்படுவது மன பதற்றம் எனும் ஒரு வகையான பயம் ஆகும். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான நபர்களுக்கு மன பதற்றம் இருக்கிறது. ஆனால் இதை பாதிக்கப்பட்டவர்களும் உணருவதில்லை. மன பதற்றத்தில் இருந்து விடுபட சில எளிய வழிகள் இந்தக் கட்டுரையில் பகிரப்பட்டுள்ளன.

மனப் பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்கு எளிதான வழி என்றால் அது 4-4-4 நுட்பம் தான். அதாவது நான்கு விநாடிகளுக்கு மூச்சை உள்ளிழுத்து, நான்கு விநாடிகளுக்கு மூச்சை பிடித்து, நான்கு விநாடிகளுக்கு தொடர்ந்து மூச்சை வெளியே விடவும். இந்த நுட்பம் உங்களை கவலையில் இருந்து விடுபட உதவுகிறது.
உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான தருணங்களை தினமும் மூன்று முறை பத்து விநாடிகளுக்கு நினைவில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். செல்போனில் இருக்கும் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை கண்டு மகிழ்ச்சி அடையவும்.
நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த செயல் எதிர்மறை எண்ணங்களை தடுக்க உதவும்.
கவலையை குறைக்க குழந்தைகளுக்கென விற்கப்படும் வண்ணம் தீட்டும் புத்தகங்களை வாங்குங்கள். அதில் தினமும் இரண்டு வரைபடங்களுக்கு வண்ணம் தீட்டுங்கள். இந்த செயல் மன அமைதியை ஊக்குவிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் படிங்க இரவில் தூங்க முடியவில்லையா ? நன்றாக தூங்குவதற்கு இந்த குறிப்புகள் உதவும்!
பதட்டப்படும் போது உங்கள் கவலைகளை புத்தகமாக எழுதுங்கள். இந்த செயல் உங்கள் நிலைமையை கவனமாக உரிய தீர்வுகளை அடையாளம் காண உதவுகிறது.
தினமும் காலையில் இன்று என்ன செய்ய போகிறோம் என்ற பட்டியலை உருவாக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இந்த நடைமுறை நிலுவையில் உள்ள பணிகளைப் பற்றிய கவலையை போக்கிடும்.
வேலை தொடர்பான மன அழுத்தத்திற்கு இருந்து விடுபட நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஸ்பாஞ்ச் பால் ஒன்றை வைத்திருங்கள். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும்போது பதற்றத்தைத் தணிக்க பந்தை அழுத்தி சில விநாடிகளுக்கு விளையாடவும்.
மேலும் படிங்க அதீத சிந்தனையை தவிர்த்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்
கவலைகளை குறைக்க ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம் என உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த செயல் பதட்டத்தை குறைக்கிறது.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com