herzindagi
tips for better sleep

Good Sleep : இரவில் தூங்க முடியவில்லையா ? நன்றாக தூங்குவதற்கு இந்த குறிப்புகள் உதவும்!

இன்றைய தலைமுறையினருக்கு இரவு நேர தூக்கம் பெரும் சிக்கலாக இருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றத்தால் தூக்கமின்றி தவிர்க்கின்றனர். இதை சரி செய்வதற்கான எளிய குறிப்புகள் இங்கே...
Editorial
Updated:- 2024-03-13, 14:27 IST

நாள் முழுவதும் அலைந்து திரிந்து வேலையை முடித்த பிறகு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு நன்றாக தூங்க நினைத்தால் ஏனோ காரணமின்றி தூக்கத்தில் தடை ஏற்படும். இரவில் குறைந்தது எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தூங்குவது உடல்நலனுக்கு மிகவும் அவசியம். இரவில் சிறந்த தூக்கத்தை பெற முக்கியமான சில குறிப்புகளை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உடலின் உள் கடிகாரத்தை சீராக்க உதவுகிறது.  அதாவது திங்கள் முதல் வார இறுதி நாட்களில் கூட இரவு பத்து மணிக்கு தூங்கினால் காலை ஏழு எழுந்திருப்பதை உறுதி செய்யவும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூங்குவதை தவிர்க்கவும்.

secrets to a good night sleep

அமைதியான படுக்கையறை

உங்கள் படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருப்பதன் மூலம் சிறந்த தூக்கத்தை பெற முடியும். இடையூறுகள் ஏற்படாமல் இருக்க காதில் பஞ்சு வைக்கலாம் அல்லது பெரிய திரைச்சீலைகளை பயன்படுத்தி இருட்டடிப்பு செய்யலாம். பேய் பயம் காரணமாக விளக்குகளை அணைக்காமல் தூங்குவதை தவிர்க்கவும்.

மின்னணு சாதனங்கள் தவிர்ப்பு

படுக்கைக்கு செல்லும்  ஒரு மணி நேரத்திற்கு முன் திரைகளில் (தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள்) பயன்பாட்டைக் குறைக்கவும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் உடலின் இயற்கையான தூக்க விழிப்பு சுழற்சியை சீர்குலைக்கும்.

குறுகிய தூக்கம் நன்மை பயக்கும் என்றாலும் பகலில் நீண்ட நேரம் தூங்குவதை தவிர்க்கவும். ஏனெனில் பகலின் குறுகிய நேரம் தூங்குவது இரவில் தூக்கத்தை  கடினமாக்கும்.

மேலும் படிங்க அதீத சிந்தனையை தவிர்த்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்

மிதமான உடற்பிற்சி

வழக்கமான உடல் செயல்பாடு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிட மிதமான உடற்பயிற்சியை இலக்காகக் கொள்ளுங்கள், ஆனால் உறங்கும் நேரத்திற்கு முன்பாக தீவிரமான உடற்பயிற்சியைத் தவிர்க்கவும்.

படுக்கைக்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கனமான உணவுகள், காரமான உணவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கும்.

தியானம்

தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்து மனதை அமைதிப்படுத்தவும். இது உங்களை தூக்கத்திற்கு தயார்ப்படுத்தும். இந்த உதவிக்குறிப்புகளை முயற்சித்த பிறகும் உங்களுக்கு தொடர்ந்து தூங்குவதில் சிக்கல் இருந்தால் ஒரு மருத்துவரை அணுகவும். தூக்கத்தின் தரத்தை பாதிக்கக்கூடிய கோளாறுகள் அல்லது சிக்கல்களை அடையாளம் கண்டு தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்.

மேலும் படிங்க சிறுநீரக கல் பிரச்சினையை தீர்ப்பதற்கான இயற்கை வழிகள்

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com