
பெரும்பாலான வீடுகளில் சூடான ஒரு கப் டீயுடன் ரஸ்கை சேர்த்து சாப்பிடுவது என்பது ஒரு பொதுவான பழக்கமாக இருக்கிறது. ஆனால் நிபுணர்கள் கருத்துப்படி இந்த டீ, ரஸ்க் ஜோடி நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஜோடியாக இருக்கிறது.
ரஸ்கில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் குளூடென், பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கட்டுரையில் ஏன் சாப்பிட கூடாது என்பதையும், அது ஆரோக்கியத்திற்கு என்ன பாதிப்பை தரும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

உணவுக்கலை நிபுணர் சிம்ரன் சைனி ஜீ இதை பற்றி கூறுகிறார். அவர் கூறுகையில், ரஸ்கை டீயுடன் சாப்பிட விரும்புகிறார்கள் காலை உணவாக சாப்படும் போது அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கலவை அதிகளவில் உள்ளது. மேலும் இவர் கூறுவது, இதில் இதயத்திற்கு நன்மை தராத கொழுப்புக்கள் அடிடிவ்ஸ் எனப்படும் பொருட்கள் உள்ளன மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதனால் நம் நாளை நல்லபடியாக தொடங்க இது ஏற்றது அல்ல. பல சமயங்களில் இது மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனையை பலருக்கு ஏற்படுத்துகிறது.
இதுவும் உதவலாம்:தண்ணீர் குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்
இதில் அதிக அளவில் குளூடென் உள்ளது. இது எளிதில் செரிமானம் ஆகாத பொருள். வயிறு உபாதைகள் உள்ளவர்கள் ரஸ்க் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிறு உப்புசம், வலி, வயிற்று போக்கு ஆகியவற்றை உண்டாக்கும். சிறு குடல் சுவரை குளூடென் சேதப்படுத்தி விடும். இதனால் ஊட்டச்சத்துக்களை குடலால் உறிஞ்ச முடியாமல் போய் விடும்.
ரஸ்க், மாவு பொருளில் செய்ய பட்டது. இதை தொடர்ந்து உண்டு வர செரிமான மண்டலம் பழுதாகி, ஆரோக்கியம் பாதிப்பு அடையும். ரஸ்க் குடல் புண்களை உண்டாக்கும். இதன் காரணமாக வயிறு உப்புசம், அஜீரணம், செரிமானமின்மை, மலச்சிக்கல் மற்றும் வேறு சில பிரச்சினைகள் தோன்றும்.
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
இதில் இனிப்பு அதிகம் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது நீரிழிவு நோய் போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
உடலில் சில தாதுக்ள் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. தானியங்களில் அதிக அளவு பைடிக் அமிலம் உள்ளது, இது இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டு அவற்றின் உறிஞ்சுதலைத் தடுக்கும்.

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை இது உயர்த்தும். இதனால் மாரடைப்பு வரும் அபாயம் உருவாகும். அதிக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் பால் கலந்த டீயுடன் சாப்பிட, ட்ரைகிளிசரைட் அளவை அதிகரிக்கும், வளர்சிதை மாற்றத்தை மாற்றி விடும், உடல் பருமன் உண்டாகும் மற்றும் இதய நோய்கள் தொடங்கி விடும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com