herzindagi
things to do while drinking water

Mistakes to Avoid While Drinking Water in Tamil: தண்ணீர் குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்

&nbsp;ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கைக்கு, தண்ணீர் குடிக்கும் போது சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-04, 08:30 IST

நம் உடலில் 60% பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு உள்ளது. நம் உடல் தன்னுடைய பல விதமான ஆற்றலை வெளிப்படுத்த தண்ணீர் அவசியம் ஆகிறது. அதாவது செரிமானம், தட்பவெப்பத்தை சீராக தக்க வைப்பது மற்றும் ஊட்டச்சத்தை சரியான முறையில் மற்ற பாகங்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களை செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது.

நமக்கு தண்ணீர் தாகம் எடுப்பது என்பது நம் உடலுக்குள் தண்ணீர் சத்து குறைந்துவிட்டது, இதனால் உடலால் எந்த செயலையும் முறையாக செய்ய முடியாது என்று மூளை நமக்கு சொல்லும் அறிகுறி. பல பேர் தாங்கள் தினமும் போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதற்கே தங்கள் வாழ்க்கையின் பட்டியலில் முக்கிய இடத்தை தருகிறார்கள். தினமும் நாம் எந்த அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிந்தாலும், (அதாவது 8டம்பளர்கள்) நாம் தண்ணீர் குடிப்பதில் அதிக கவனத்தை செலுத்துவது இல்லை.

தண்ணீர் குடிப்பது நமக்கு எந்த வகையில் நன்மை தரும்? ஆயுர்வேத நிபுணர், டாக்டர். சேடாலி ஜீ அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். நாம் தண்ணீர் குடிக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், அது என்ன என்பதை தெரிந்து கொள்ளளுங்கள்.

இதுவும் உதவலாம்:தண்ணீர் காலாவதியாகுமா?


rules to drink water in tamil

தண்ணீர் குடிக்கும் முறைகள்

தினமும் காலை தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும்

இதற்கு ஆயுர்வேதத்தில் உஷாபன் என்று பெயர். ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவர் சூடான தண்ணீர் (உஷாபனா) அல்லது செம்பு தண்ணீர், குடிக்க வேண்டும். இந்த ஆரோக்கியமான பழக்கத்திற்கு எண்ணிலடங்கா பலன்கள் உள்ளன.

உஷாபன் பலன்கள்

  • உஷாபன் என்பது நம் செரிமான சக்தியைத் துரிதப்படுத்துகிறது. உணவு குழாயில் உணவு சரியான முறையில் நகர உதவுகிறது, மேலும் குடலில் சிக்கி இருக்கும் பொருட்களை வெளியேற்றும். குடலில் இருந்து வெளியேறிய பிறகு செரிமான சக்தி விரைவாக செயல்படும்.
  • செம்பு நீர் என்பது நேர்மறை குணம் கொண்டது. அது மூன்று தோஷங்களையும் சரி செய்து விடும். தோஷம் காரணமாக ஏற்படும் வியாதிகளும் நீங்கி விடும்.
  • தினசரி உஷாபனா பின்பற்றுவது சிறுநீரகத்தை ஊக்குவிக்கும். சிறுநீரகம் நன்கு செயல்படும். செம்பு தன்மை சிறுநீரகத்தில் செயல்பட்டால் உறிஞ்சுதல், இரத்த சுழற்சி மற்றும் தேவையற்றதை வெளியேற்றுதல் போன்ற வேலைகளை சிறுநீரகத்தால் சிறப்பாக செய்ய முடியும்.
  • உஷாபன் உங்களுக்கு மூன்று மடங்கு உடல் எடையை குறைக்க உதவும். கப தோஷம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் உடல் பருமன் உருவாகும். உஷாபன் மூன்று தோஷங்களையும் சமநிலைபடுத்தி செரிமான சக்தியைத் தூண்டும்.

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம்

  • நீங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், சாப்பிட்ட உணவு மெதுவாக ஜீரணம் ஆகும் மற்றும் வளர்சிதை மாற்றம் பாதிக்கும். இதனால் செரிமானமின்மை ஏற்படும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால், சாப்பிடும் போது நீர் அருந்தினால் செரிமான மண்டலம் பலவீனம் அடையும். இதனால் தான் வாய்வு கோளாறு, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தொடங்கும்.
  • உணவுடன் தண்ணீர் சேர்த்து பருக, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கரைந்து விடும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
  • சாப்பிட்ட பிறகு கேஸ்ட்ரிடிஸ் எனும் வேதியியல் பொருள் வயிற்றில் அதிகரிக்கும். இந்த பொருளானது தண்ணீரில் கரைந்து விடும். இதனால் உணவு செரிமானம் சரியாக நடக்காது.

rules to drink water in tamil

எப்போதும் உட்கார்ந்த படி நீர் பருகலாம்

  • எப்போதும் தண்ணீரை அவசரமாகவோ அல்லது விழுங்கியோ குடிக்க கூடாது. தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.
  • நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்த வேண்டாம்

  • பிளாஸ்டிக்கில் உள்ள நுண்பொருட்கள் நமக்கு கேன்சர் உண்டு செய்யும் அபாயம் கொண்டது. இத்துடன் சேர்ந்து ஹார்மோன் சமச்சீர் இல்லாத தன்மை மற்றும் வேறு சில வியாதிகளும் அதிகரிக்கும்.
  • எனவே பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் வேறு எந்த பிளாஸ்டிக் பொருட்களிலும் சேமிக்கும் தண்ணீர் நல்லதல்ல. இதற்கு காரணம் பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப் பொருட்கள் நம் உடலுக்குள் சென்று, நம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
  • சூரிய ஒளி நேரடியாக பிளாஸ்டிக்கில் படும் போது, பிளாஸ்டிக் தன்மை உருகி அதிலிருந்து டைடாக்சின் போன்ற நச்சு பொருட்களை வெளியேற்றும். இதனால் மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
  • பைபினைல் -A என்பது ஈஸ்ட்ரோஜன் உண்டாக்கும் வேதி பொருள். இது நீரிழிவு நோய், உடல் பருமன், இனப்பெருக்கம் மற்றும் மனமாற்றம் பிரச்சனை, முன்கூட்டியே சிறுமிகள் பூப்பெய்துவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம்.
  • ஃப்தாலேட்ஸ் எனும் வேதிப் பொருள், நமக்கு கல்லீரல் கேன்சர் உண்டாக்கும் மற்றும் ஸ்பெர்ம் அளவை குறைக்கும். ஃப்ரெடோனியா, நியூயார்க் நகரில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு கூறுவது என்னவென்றால் மிக பிரபலமான பிராண்ட் தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் இதிக அளவில் நுண்கிருமிகள் இருக்கின்றன.

இதுவும் உதவலாம்:குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com