herzindagi
image

அதிகமாக உழைத்தும் பலன் இல்லையா? உங்கள் செயல்திறனை பாதிக்கும் 5 பழக்கங்கள் இவை தான்

உங்களது செயல்திறனை கடுமையாக பாதிக்கும் 5 பழக்கங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். இவற்றை கைவிடுவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியும்.
Editorial
Updated:- 2025-11-19, 18:49 IST

நீங்கள் கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியவில்லையா? அப்படியென்றால், உங்கள் செயல்திறனை (Productivity) அழிக்கும் சில பழக்கங்களை அறியாமலேயே நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். இந்த ஐந்து பழக்கவழக்கங்கள் உங்கள் கவனம், ஆற்றல் மற்றும் நேரத்தை தடுத்து, உழைப்புக்கு ஏற்ற பலனை தராமல் ஏமாற்றம் அடையச் செய்யும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தல் (Multitasking):

 

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிப்பது, கவனம் மற்றும் செயல்திறனை குறைக்கிறது. நீங்கள் அதிக வேலைகளை செய்வது போல் உணர்ந்தாலும், உண்மையில் குறைவான பலன்களையே அடைகிறீர்கள். ஒவ்வொரு முறை ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போதும், உங்கள் மூளைக்கு மீண்டும் கவனம் செலுத்த கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துங்கள். இது உங்கள் வேலையின் தரத்தையும், வேகத்தையும் அதிகரிக்கும்.

 

வேலை செய்வதில் காலம் தாழ்த்துவது (Procrastination):

 

செய்ய வேண்டிய வேலையை தொடர்ந்து தள்ளிப் போடுவது என்பது, காலப்போக்கில் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு குறிப்பிட்ட வேலை உங்களுக்கு கடினம் ஆகும். இதனால், தள்ளிப்போடும் பழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

Procrastination

 

மேலும் படிக்க: மழைக்காலத்தில் மூக்கடைப்பு, சைனஸ் தொல்லையா? இதோ எளிய தீர்வுகளும், தடுப்பு முறைகளும்!

 

தூக்கமின்மை:

 

போதுமான மற்றும் நல்ல தூக்கம் இல்லையென்றால், ஆற்றல், கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும். சோர்வான மூளை மெதுவாகவும், பயனற்றதாகவும் இருக்கும். இரவில் செல்போனை பார்ப்பது அல்லது சீரற்ற தூக்க நேரம் உங்கள் செயல்திறனை கடுமையாக பாதிக்கிறது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கத்தை பெறுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை கடைபிடித்து ஒரு நிலையான தூக்க வழக்கத்தை உருவாக்குங்கள்.

மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்

 

இடைவெளிகளை தவிர்த்தல்:

 

தொடர்ந்து இடைவெளி இல்லாமல் வேலை செய்வது மனசோர்வுக்கும், உளவியல் சோர்வுக்கும் வழிவகுக்கிறது. நீண்ட நேரம் ஒரே வேலையில் ஈடுபட்டால் கவனம் சிதறத் தொடங்கும். ஒவ்வொரு 45 முதல் 90 நிமிட வேலைக்கு பிறகும், குறுகிய இடைவெளிகளை (5-10 நிமிடங்கள்) எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சிறிய இடைவெளிகள் உங்கள் கவனத்தையும், படைப்பாற்றலையும் புதுப்பிக்க உதவும்.

Tired

 

தேவை இல்லாமல் ஒரே வேலையில் அதிக நேரம் செலுத்துவது:

 

ஒரு வேலையை தேவையில்லாமல் அதிகமாக மெருகூட்ட முயற்சிப்பது, அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன், அந்த வேலையை முடிப்பதை தாமதப்படுத்துகிறது. செயல்திறனை ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற வகையில், மட்டுமே செயல்பட வைக்க வேண்டும்.

 

இவற்றை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆற்றிய பணியில் இருந்து எதிர்பார்த்த பலனை சரியான முறையில் பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com