நாம் அனைவரும் கோடையில் மாம்பழங்களை சாப்பிட விரும்புகிறோம், ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன் நாம் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாம்பழங்கள் சிறந்த ஆரோக்கியம் தரும் நற்பலன்களுடன் நிரம்பியுள்ளன, ஆனால் எதையுமே அதிகப்படியாக உட்கொள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பழத்தை அதிகமாக உண்பதால் ஏற்படும் சில தீமைகள் அல்லது பக்கவிளைவுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க எப்படி டீ குடிக்க வேண்டும் தெரியுமா?
மாம்பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளுக்கு பிரபலமானவை, ஆனால் இந்த பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கை ஏற்படுத்த கூடியது. மாம்பழங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும், எனவே நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், அதிக சர்க்கரை அளவு இருப்பதால் உண்பதை தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அதிகப்படியான மாம்பழங்கள் உங்கள் குடலில் எரிச்சலை ஏற்படுத்தும். நார்ச்சத்து அதிகம் உள்ள எந்தப் பழமாக இருந்தாலும், அது வயிற்றுப்போக்கை உண்டாக்கும். எனவே, நீங்கள் மாம்பழங்களை அதிகமாக உண்பதில் இருந்து உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் உங்கள் மாம்பழ ஆசையை திருப்திப்படுத்த சில மாம்பழ துண்டுகளை மட்டும் சாப்பிட்டால் போதும்.
மாம்பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன மற்றும் அதிக கலோரிகள் உள்ளன, இது எடை குறைக்க முயற்சிக்கும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான மாம்பழங்களை சாப்பிடும் போது, உங்கள் இடுப்பு பகுதியில் சில அங்குலங்கள் கூடி விடும். எனவே ஒரு நல்ல கட்டுக்கோப்பான உடலமைப்பை பராமரிக்க நீங்கள் மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
மாம்பழங்களில் உருஷியோல் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தோல் அழற்சியை ஏற்படுத்தும். தோலழற்சியானது சருமத்தில் வீக்கம் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். மாம்பழங்கள் ஒரு சிலருக்கு சில ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்கள் மூக்கு ஒழுகுதல், வயிற்று வலி போன்றவற்றால் பாதிக்கப்படலாம். சில உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தம் மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் அர்டிகேரியா போன்ற தோல் பிரச்சனைகளுக்கும் இது வழிவகுக்கும்.
ஆராய்ச்சியின் படி, மாம்பழங்கள் ஒரு சிலருக்கு அனாபிலாக்டிக் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இது ஒரு ஒவ்வாமை எதிர்வினையாகும், இது உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் குமட்டல், வாந்தி, அதிர்ச்சி மற்றும் சுயநினைவின்மைக்கு வழிவகுக்கும்.
இதுவும் உதவலாம் :ஆரோக்கியமான முறையில் வைட்டமின்கள் அதிகரிக்க உதவும் ஸ்மூத்தி ரெசிபிக்கள்
வர்ஜீனியா பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, குளுக்கோஸுடன் ஒப்பிடும்போது மாம்பழங்களில் பிரக்டோஸ் அளவில் அதிகமாக உள்ளது, இது உடலில் சீரற்ற ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, இதனால் பிரக்டோஸை உடல் உறிஞ்சுவது கடினமாகிறது, இந்த நிலையால் மேலும் வயிற்றில் வீக்கம் மற்றும் மற்ற செரிமான பிரச்சினைகள் உருவாகிறது. நீங்கள் ஏதேனும் அஜீரண கோளாறுகளை எதிர்கொண்டால், மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com