
அனோஸ்மியா விழிப்புணர்வு தினம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனோஸ்மியாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஷீன் என்பவர் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முகநூலை பயன்படுத்தியுள்ளார். அன்று முதல் அனோஸ்மியா பிரச்சினையின் மீது பலரும் கவனம் செலுத்த அனோஸ்மியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சர்வதேச அளவில் நிதி திரப்பட்டடு வருகிறது.
வாசனை உணரும் திறன் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். இது இறைவனால் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட வரம். மழை பெய்தால் வரும் மண் வாசனையில் இருந்து மலரின் வாசனை வரை அனைத்துமே நமக்கு நெருக்கமான விஷயம். வீட்டில் நமது அம்மா சமைத்து கொண்டிருந்தால் அதன் வாசனையை வைத்தே சமைக்கும் உணவைப் பற்றி தெரிந்து கொள்வோம். வாசனையே சில நேரங்களில் பசியையும் தூண்டுகிறது. அந்த அளவிற்கு வாசனை நமது அன்றாட வாழ்வில் ஒன்றி இருக்கிறது.

மூச்சு விடுவதற்கு மூக்கை பயன்படுத்தும் போது நம்மால் வாசனையை எப்படி உணர முடிகிறது என யோசித்து பார்த்திருக்கிறோமா? நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் வாசனை உணர்வு திறனுக்கான செல். இது olfactory receptors என்று சொல்லப்படுகிறது. இவை நமது மூக்கின் மேல் பகுதியில் இருக்கும். இது தான் ஒரு உணவின் வாசனையை நமக்கு அறிய வைத்து அதை மூளைக்கு தகவலாக அனுப்பும். மூளை இந்த தகவலை செயல்படுத்தி நமக்கு அது பிடித்திருந்தால் உணவை நோக்கி நம்மை நகர்த்தும். திடீரென்று நம்மால் எந்த வாசனையையும் நுகர முடியவில்லை நமது மூக்கிற்கு வாசனையே வரவில்லை என்ற சூழல் ஏற்பட்டால் அனோஸ்மியா பாதிப்பு என புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிங்க புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க ஒன்றிணைவோம் போராடுவோம்!
சாப்பாடாக இருந்தால் கூட ஓரளவு சமாளித்துவிடலாம். ஆனால் வீட்டில் வாயு கசிவு அல்லது கெட்டுப்போன உணவின் வாசனையை நம்மால் அறிய முடியாமல் போனால் நமது வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படும். வாசனையை உணர முடியாமல் போவதும் ஒரு விதமான கோளாறு தான்.
இதற்கு அனோஸ்மியா என்று பெயர். வாசனை உணர்வு தன்மை முற்றிலும் செயலிழந்து போவது தான் அனோஸ்மியா. சில பேருக்கு சிறிது நாட்களில் அனோஸ்மியா போய்விடும். சில பேருக்கு நிரந்திரமாக இருக்கும். பிறப்பிலேயே சிலருக்கு அனோஸ்மியா இருக்கவும் வாய்ப்புண்டு.
காது, மூக்கு, தொண்டை பகுதிகளில் எதாவது அடிபட்டு இருந்தால் அல்லது அறுவை சிகிச்சை செய்திருந்தால் அல்லது அதிகமான கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் அனோஸ்மியா வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வலிப்பு, வாதம், ஆஸ்துமா இருந்தால் அனோஸ்மியா நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளன.
சில சமயங்களில் அனோஸ்மியா தானாகவே சரியாகிவிடும். இதற்கு மாத்திரைகளும் உள்ளன. எப்படி இருந்தாலும் அனோஸ்மியா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணர் அணுக வேண்டும்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com