பொதுமக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்க வைத்த கொரோனா வைரஸ் உலகின் மிகக் கொடிய வைரஸ் என்றாலும் சில வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் விகிதம் குறைவாகவே உள்ளது. மார்பர்க் வைரஸில் தொடங்கி மச்சுபோ வைரஸ் வரை நீங்கள் அறியாத சில வைரஸ்கள் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் கொடூர வைரஸ்களாகும்.
மார்பர்க் வைரஸ்
மிகவும் ஆபத்தான வைரஸ்களில் முதலிடம் பிடிப்பது மார்பர்க் வைரஸ் ஆகும். இது லான் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள அழகான நகரின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த அழகிய நகரத்திற்கும் மார்பர்க் வைரஸுக்கும் தொடர்பு இல்லை. இது உடலில் இரத்தக் கசிவு ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஆகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பது 90 விழுக்காடு உறுதி.
எபோலா வைரஸ்
எபோலா வைரஸின் பெயர் ஒவ்வொன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. Zaire Ebola வைரஸ் தான் மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 90 விழுக்காடு இறப்பு உறுதி. இந்த வைரஸ் தற்போது கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியா போன்ற நாடுகளில் பரவுகிறது. வவ்வால்கள் இந்த வைரஸின் பரவலுக்கு காராணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஹன்டா வைரஸ்
ஹன்டா வைரஸ் 1950 ஆம் ஆண்டு கொரியப் போரின் போது அமெரிக்க வீரர்கள் முதன் முதலில் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட நதியின் பெயரால் இது குறிப்பிடப்படுகிறது. இதன் அறிகுறிகள் நுரையீரல் நோய், காய்ச்சல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகும்.
பறவைக் காய்ச்சல் வைரஸ்
பறவைக் காய்ச்சல் எப்போதுமே அச்சத்தை ஏற்படுத்தும் வைரஸ்களில் ஒன்றாகும். இதன் இறப்பு விகிதம் 70 விழுக்காடு ஆகும். கோழி வளர்ப்பில் ஈடுபடும் நபர்கள் நேரடி தொடர்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆசிய நாடுகளில் இந்த வைரஸ் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிங்க உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
லாசா வைரஸ்
நைஜீரியாவில் உள்ள செவிலியர் ஒருவர் லாசா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். இந்த வைரஸ் ஒரு விதமான எலிகள் மூலம் பரவுகிறது. மேற்கு ஆப்பிரிக்கா இந்த வைரஸின் தாக்கம் இருக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்ள 15 விழுக்காடு எலிகள் இந்த வைரஸைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஜூனின் வைரஸ்
ஜூனின் வைரஸ் அர்ஜென்டினா ரத்தக்கசிவு காய்ச்சலுடன் தொடர்புடையது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் திசு வீக்கம் தோல் இரத்தப்போக்கால் அவதிப்படுகின்றனர். இதன் பிரச்சனை என்னவென்றால் அறிகுறிகள் மிகவும் பொதுவானதாக இருக்கும். ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும்.
மச்சுபோ வைரஸ்
மச்சுபோ வைரஸ் பொலிவியா நாடின் ரத்தக்கசிவு காய்ச்சலுடன் தொடர்புடையது. இந்த நோய்த்தொற்று பயங்கர காய்ச்சலை ஏற்படுத்துகிறது, கடுமையான இரத்தப்போக்கு உண்டாக்குகிறது. இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
மேலும் படிங்க“அனோஸ்மியா” வாசனை உணர்வு திறன் இழப்புக்கான மருத்துவ சிகிச்சை
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொசுக்களால் பரவும் டெங்கு தாய்லாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுக்கு 5 முதல் 10 கோடி மக்களை பாதிக்கிறது. சுமார் 200 கோடி மக்கள் எப்போதுமே டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation