உடல் பருமனால் கவலையா?
உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்களா?
இதை எப்படி தொடங்குவது என்று புரியாமல் குழம்புகிறீர்களா?
கவலை வேண்டாம் உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கான சில எளிய குறிப்புகளை இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். இதை பின்பற்றுவதன் மூலம் அதிகமாக உள்ள எடையை விரைவில் குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பெண்கள் பலவிதமான வீட்டு வைத்தியம் மற்றும் குறிப்புகளை முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு பதிலாக உங்கள் உடல் சொல்வதை கேட்டால் போதும், எடையை குறைப்பது சுலபமாகும். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிட கூடாது போன்ற தகவல்களை உங்கள் உடல் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தேனை இந்த 5 வழிகளில் பயன்படுத்தினால் சிறந்த பலன்களை பெறலாம்!
எல்லோருடைய வாழ்க்கையும், உணவு வழக்கமும், செயல்பாடுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான டயட் அணுகுமுறை சரியானதல்ல. ஒருவருடைய உயரம் மற்றும் எடையை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற சரியான உணவுகளை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது நல்ல விளைவுகளை காண முடியும். இதனுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டியது அவசியம்.
இப்பதிவில் பகிரப்பட்டுள்ள நான்கு குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தக் குறிப்புகளை ஊட்டச்சத்து நிபுணரான ஆஞ்சல் சோஹானி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். நிபுணரின் இந்த நான்கு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைப்பதுடன் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
உடல் எடையை குறைக்க சரியான உணவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியம். இந்நிலையில் உங்களுக்கு விருப்பமான ஒரு உடற்பயிற்சியுடன் உங்கள் எடை இழப்பு பயணத்தை தொடங்கலாம். இதில் ஜாகிங், நடனம், ஸ்கிப்பிங் அல்லது நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். உங்களுடைய இலக்கை பொறுத்து இதை தேர்வு செய்து செய்யுங்கள்.
உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் பொழுது மெதுவாக செய்யவும், பிறகு இதை வழக்கமாக செய்யத் தொடங்கும் பொழுது வேகத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். வாரத்தின் 5 நாட்களுக்கு, குறைந்த தீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சிகளை 60 நிமிடங்கள் செய்வதை இலக்காக கொள்ளுங்கள். உங்கள் உடல் தகுதியை அதிகரித்தவுடன் ஜாகிங், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளை செய்யும் பொழுது கைகளில் எடைகளையும் சுமந்து பயிற்சி செய்யவும்.
உடல் எடையை குறைக்கும் பொழுது உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை விட்டு விட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இதை குறைந்த அளவுகளில் எடுத்துக் கொள்ளவும். உதாரணமாக உங்களுக்கு பீட்சா சாப்பிட பிடிக்கும் என்றால் முதலில் ஒரு கப் அளவிற்கு காய்கறி அல்லது பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட் சாப்பிடவும் பிறகு பீட்சா எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சாப்பிடும் பொழுது உங்களால் முழு பீட்சாவையும் சாப்பிட முடியாது. ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிட்டாலே நீங்கள் நிறைவாக உணர்வீர்கள்.
பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் அடிக்கடி தங்களுடைய உடல் எடையை சரி பார்த்து கொள்வது வழக்கம். இதனுடன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களையும் கவனியுங்கள்.
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இது மிகவும் முக்கியமானது. உங்கள் இலக்கை அடைய முடியாத ஆரம்ப நாட்களில் அதை கைவிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யும் பொழுது அதற்கான பலனை நிச்சயம் காணலாம்.
மேலும் பெரிய இலக்கை அடைவதற்கு முன் உங்களுக்கான சிறிய இலக்கை தீர்மானியுங்கள். உதாரணமாக நீங்கள் 10 கிலோ எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால் முதலில் 5 கிலோ எடையை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள். பின்னர் அடுத்த 5 கிலோ எடையை குறைப்பதில் கவனம் செலுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம்: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த 5 வாழ்க்கை முறை மாற்றங்களை செய்திடுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com