
மாதவிடாய் வருவதற்க்கு முன்பு அறிகுறியாக இடுப்பு, வயிறு பகுதிகளில் லேசான வலி, கைகள் மற்றும் பாதங்களில் வலி ஏற்படும். இதை வைத்தே மாதவிடாய் வர போகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவை எல்லாம் இயற்கை நமக்கு மாதவிடாய் வருவதற்காக கொடுத்த அறிகுறிகள். ஆனால் அளவுக்கு அதிகமான வலி இருப்பவர்களுக்கு கட்டாயம் மருத்துவ ஆலோசனை அவசியம்
குக்ரேஜா மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் அரோரா அவர்கள் கூறுவது, "உங்களுக்கு மாதவிடாய் காலங்களில் சாதாரண வலி இருந்தால் அது பொதுவான வலி தான். ஒரு வேளை தாங்க முடியாத வலி ஏற்பட்டால் நிச்சயம் அந்த வலியை கருத்தில் கொள்ள வேண்டும்." சில பெண்கள் மாதவிடாய் வலி தாங்க முடியாமல் வலி மாத்திரைகள் சாப்பிடுவார்கள். எனவே நீங்கள் அவர்களில் ஒருவர் என்றால், வலி உண்டாகும் காரணத்தை கண்டறிய வேண்டும்.
இதுவும் உதவலாம்:உங்களின் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
வாழ்வில் ஒரு கட்டத்தில் 75 % பெண்கள் இந்த பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. கருப்பை கட்டிகள் என்பது கருப்பையில் வளரக்கூடியது. இவை சிறு சிறு குழாய்கள் போல இருக்கும். இவை கருப்பையின் சுவர்களை தொடும் போது வலி அதிகமாகி விடும். அவை கேன்சர் கட்டிகள் இல்லையென்றாலும் வலியை அதிகரித்து விடும். மாதவிடாய் நீண்ட நாட்களாக இருக்கும். அதிக உதிரப்போக்கு அல்லது அதிக வலி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அது நீர்க்கட்டியாக இருக்கலாம்.
பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்துவது தான் இந்த நோய். கொனோரியா அல்லது க்ளாமிடியா போன்ற வியாதிகளின் உச்ச கட்ட நிலை இது. இந்த வியாதிக்கு தானாக எந்த வித அறிகுறிகளும் இருக்காது. ஆனால் வயிற்றை சுற்றிய பகுதிகளில் வலி உண்டாகும். மாதவிடாய் சீரற்று இருக்கும். உடலுறவில் போது வலி ஏற்படும் மற்றும் வெள்ளை பாடு அதிகம் இருக்கும்.

கருப்பையின் சுவர்கள் வெளிப்பக்கமாக வளரும். இதனால் இடுப்பு தசை பகுதியில் வலி மட்டும் ஏற்படாது, இனப்பெருக்கத்திலும் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் மாதவிடாய் இல்லை என்றாலும் வலி உண்டாகும். கிட்டத்தட்ட 10% பெண்கள் இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இது போன்ற மூன்றில் ஒரு மடங்கு பெண்களுக்கு கருத்தரிக்கும் போது சிக்கல் ஏற்படலாம். இதற்காக வருத்த பட வேண்டாம். முறையான சிகிச்சை சிறந்த பலனை தரும்
மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பு, பெண்ணின் உடல் அதிகமாக ப்ரொஜஸ்டரான் ஹார்மோனை சுரக்கிறது. மனவுளைச்சல் ஏற்படும் போது கார்டிசால் அளவும் அதிகமாகும். இரண்டும் சேர்ந்து ஹார்மோன் அளவை சீரற்றதாக மாற்றுகிறது. இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த தினமும் யோக பயிற்சி, தியான பயிற்சி ஆகியவற்றை உடற்பயிற்சியாக செய்ய, நல்ல ஹார்மோன் சிரோட்டின் சுரக்கும்.
வயது ஏற ஏற மாதவிடாய் வலியும் ஏறும். 20 வயதிற்கு பிறகு மாதவிடாய் வலி பயங்கரமாகும். ப்ரோஸ்டா கிளாண்டின் ஹார்மோன் சுரப்பு கருப்பை சுவற்றை மெலிதாக்குகிறது. இதனால் வயது ஏறும் போது வலியும் அதிகம் உண்டாகிறது.
இதுவும் உதவலாம் :வெள்ளைப்படுதல் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com