கருப்பு திராட்சையை முறையாக காய வைத்து உலர்ந்த திராட்சை தயாரிக்கப்படுகிறது. இது பாரம்பரியமாக இனிப்பு உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலர்திராட்சை சுவையானது மட்டுமல்ல, அது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.
உங்கள் அன்றாட உணவு முறையில் உலர் திராட்சை இல்லை எனில் அதை சேர்க்க முயற்சி செய்யலாம். அந்த வகையில் உலர் திராட்சையின் நீரை குடிப்பது உங்களுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுடன் பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, உலர் திராட்சை நீரினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
உலர் திராட்சை நீர் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. இது பாரம்பரியமாக உடல் நலம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலர் திராட்சை நீரின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
திராட்சை தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன. இதில் எலுமிச்சை சாறை சேர்க்கும் பொழுது அது கூடுதல் ஆரோக்கியம் நிறைந்த பானமாக இருக்கும். மேலும் இது நச்சுக்களை அகற்றுவதற்கான ஒரு சிறந்த தீர்வு என ஊட்டச்சத்து நிபுணர் கவிதா தேவ்கன் அவர்கள் கூறியுள்ளார்.
உலர்ந்த திராட்சை நீரை குடிப்பது உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இந்த நீர் கல்லீரலின் செயல் முறையை மேம்படுத்தவும், இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அசிடிட்டி பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு உலர் திராட்சை நீர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இது வயிற்றில் உள்ள அமிலத்தை ஒழுங்கு படுத்தி, அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
உலர் திராட்சை நீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. நோய்வாய்ப்படுவதை தவிர்க்க இந்த நீரை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உலர் திராட்சை நீர் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு பொருளாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உலர் திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிகல்களிடமிருந்து உடலை பாதுகாக்கின்றன.
உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கிறது. இதன் நீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அஜீரணம் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இதைத் தொடர்ந்து குடிப்பது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உலர் திராட்சை நீரை காலையில் எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உலர் திராட்சை நீர் நல்லது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இரத்த சோகையை தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:தண்ணீர் காலாவதியாகுமா?
உலர் திராட்சையில் உள்ள போரான் மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் நீரை குடிப்பது உங்கள் எலும்புகளின் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
உலர் திராட்சை நீரின் நன்மைகளை பெற இதை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைபாடு இருந்தால் அல்லது ஏதாவது சிகிச்சை எடுத்து வந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இதை பின்பற்றுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்:குங்குமப்பூ நீரின் 4 அற்புத நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com