நாம் பல அற்புதமான மூலிகைகளையும், மசாலா பொருட்களையும் நம் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். இவை உணவுக்கு நல்ல சுவையையும், நறுமணத்தையும் கொடுப்பதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன. மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்களை பற்றி பேசும் போது குங்குமப்பூவை குறிப்பிடாமல் இருக்க முடியாது. உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ சாஃப்ரன் குரோக்கசு என்ற தாவரத்தின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சிவப்பு நிற குங்குமபூவின் இழைகளை கொஞ்சமாக உணவில் சேர்த்தால் போதும், உணவின் சுவை பல மடங்கு அதிகரித்துவிடும்.
குங்குமப்பூ குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய குங்குப்பூ நீரில் நிறைந்துள்ள நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாசுக்களை அகற்றவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. ஆரோக்கியமான சருமம் பெற குங்குமப்பூ நீரை குடிக்கலாம். இதனை தினமும் குடித்து வந்தால் உங்கள் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குங்குமப்பூ நீர் உங்கள் சரும அமைப்பை மேம்படுத்தி, சருமத்தை பிரகாசிக்க செய்கிறது.
மாதவிடாய் தொடங்குவதற்கு முன்னதாக உணரப்படும் அறிகுறிகள் மாதவிடாய் நோய்க்குறி(PMS) என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் PMS அறிகுறிகளை குறைப்பதற்கு குங்குமப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன் ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கவும் குங்குமப்பூ உதவுகிறது.
Healthline பதிவிட்ட ஒரு பதிவில் குங்குமப்பூ PMS இன் அறிகுறிகளை குறைக்க உதவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னதாக தலைவலி, எரிச்சல் மனநிலை மாற்றங்கள், குறிப்பிட்ட உணவின் மீது விருப்பம் மற்றும் வலி போன்ற அறிகுறிகளை பெண்கள் உணர்கிறார்கள். இது போன்ற அறிகுறிகளை சமாளிக்க மருந்துகளை விட குங்குமப்பூ நல்ல பயன் அளிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 20-45 வயது உடைய பெண்கள் தினமும் 30 மில்லி கிராம் அளவு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதன் மூலம் PMS இன் அறிகுறிகளை சமாளிக்கலாம். மேலும் மற்றொரு ஆய்வில் குங்குமப்பூவை 20 நிமிடங்கள் நுகர்வது பதட்டம் மற்றும் மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோலின் அளவை குறைப்பதாக தெரியவந்துள்ளது.
குங்குமப்பூ ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. இது நமது செல்களை அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது. குங்குமப்பூ நீர் மூளையின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
குங்குமப்பூவை இனிப்பு உணவுகளிலும் மற்றும் ஒரு சில பிரியாணி வகைகளிலும் சேர்க்கலாம். குங்குமப்பூவை சுடுதண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரில் குங்குமப் பூவை ஊற வைத்தால் அதன் தனித்துவமான சுவையும் நிறமும் வெளிப்படும். இந்த குங்குமப்பூ நீரை சமையலுக்கு பயன்படுத்தலாம். இது உணவுக்கு தனித்துவமான மணம் மற்றும் சுவையை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?
2-3 குங்குமப்பூ இழைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். குங்குமப்பூ சூடான விளைவைக் கொண்டிருப்பதால் அதை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. 2-3 இழைகள் பயன்படுத்தினால் போதுமானது.
இந்த பதிவும் உதவலாம்: நோயின்றி வாழ இந்த 15 குறிப்புகளை பின்பற்றலாமே
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com