நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கக்கூடிய, விலை மலிவான இந்த கொய்யா பழத்தை குறைவாக மதிப்பிட வேண்டாம். விலை உயர்ந்த பல பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை விட இந்த சிறிய கொய்யா பழத்தின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. நம் மண்ணில் விளையக்கூடிய இது போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.
கொய்யா பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தது. இது குறித்த தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வாய் புண் வருவதற்கான காரணம் என்ன? இதற்கான ஒரு எளிய தீர்வையும் தெரிந்துகொள்ளுங்கள்!
கொய்யா பழத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
கொய்யா பழங்களை சரியான அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா பழத்தை தங்கள் அன்றாட உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
கொய்யா பழத்தில் உள்ள பண்புகள் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கின்றன. இது விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணியான செல் சேதத்தை தடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கொய்யா பழத்தில் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: மலம் கழிக்க கடினமாக உள்ளதா? சிரமம் இல்லாமல் மலம் கழிக்க இதை ட்ரை பண்ணுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com