இன்றைய காலத்தில் 30 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் பலருக்கும் ஸ்ட்ரெஸ் டென்சன் மன அழுத்தம் காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. பூசணி விதைகள் சிறியதாக இருந்தாலும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மிகவும் அதிகம். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்க உதவுகிறது. இந்த கட்டுரையில், பூசணி விதைகளின் இதய ஆரோக்கிய பயன்கள் மற்றும் அதை எவ்வாறு உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பூசணி விதைகளில் நிறைந்துள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இவை இரத்த அழுத்தத்தை சீராக்கி, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன.
பூசணி விதைகளில் உள்ள ஓமேகா-3 மற்றும் ஓமேகா-6 கொழுப்பு அமிலங்கள் LDL (கெட்ட கொழுப்பு) அளவைக் குறைத்து, HDL (நல்ல கொழுப்பு) அளவை அதிகரிக்கின்றன. இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இவற்றில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு எனப்படும் சேர்மம் இரத்த நாளங்களை விரிவாக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உங்கள் இதயம் எளிதாக பம்ப் செய்ய முடிகிறது.
பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் வயிற்றை நிரம்பவைத்து, அதிக கலோரி உட்கொள்வதைத் தடுக்கிறது. இது உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
பூசணி விதைகளை சுத்தம் செய்து, உப்பு மற்றும் மசாலாப் பொடிகளுடன் கலந்து வறுத்தெடுக்கலாம். இதை ஒரு சிற்றுண்டியாக அல்லது சாலட் மீது தூவி சாப்பிடலாம்.
பூசணி விதைகளை துவையல், சாம்பார், குழம்பு அல்லது இனிப்பு பலகாரங்களில் சேர்த்து சமைக்கலாம். இது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும்.
பூசணி விதைகளை இரவு முழுக்க தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பால் அல்லது பழங்களுடன் கலந்து ஸ்மூதியாக குடிக்கலாம். இது அதிக நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும்.
பூசணி விதைகளை பொடி செய்து, அதை ரொட்டி அல்லது இட்லி மாவுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: பழங்கள் மட்டுமே சாப்பிட்டு எடை குறைக்கலாமா? இந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை
அந்த வரிசையில் பூசணி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள வழிகளில் பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம். மேலும் எந்தவொரு உணவும் அதிகமாக சாப்பிடாமல், சமநிலையாக உட்கொள்வது நல்லது. நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், முதலில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com