herzindagi
constipation morniing routine easy

மலச்சிக்கலை விரட்டிட காலையில் எழுந்தவுடன் இதை செய்யுங்கள்!

மலச்சிக்கல் பிரச்சனையால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? இதற்கான உடனடி தீர்வை இப்பதிவில் படித்தறியலாம்…
Editorial
Updated:- 2023-07-02, 20:41 IST

மலச்சிக்கலை போக்க என்ன செய்ய வேண்டும்? இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்கலாம். உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்தப் பிரச்சனை வரத் தொடங்குகிறது. இந்நிலை தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையும் தேவைப்படலாம். இதிலிருந்து விடுபட ஒரு சிலருக்கு மருந்துகளும் பரிந்துரைக்கப் படலாம்.

மலச்சிக்கலுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் சிகிச்சையுடன் சேர்த்து வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் சில நல்ல மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றங்களை பார்க்க முடியும். மலச்சிக்கல் தீர ஒரு சுலபமான வழியை உணவியல் நிபுணரான மருத்துவர் சினேகல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

இந்த பதிவும் உதவலாம்: ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்ள மாலையில் இதை சாப்பிடுங்க!

 

மருத்துவர் சினேகல் அவர்களின் கருத்துப்படி ஒரு சிலர் தங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பற்றி வெளிப்படையாக பேச விரும்புவதில்லை எனவும், இது ஒரு மோசமான பிரச்சனையாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மலச்சிக்கலை பற்றி வெளிப்படையாக பேசினால் மட்டுமே இதற்கான தீர்வை காண முடியும் என மருத்துவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் 22 சதவீதம் பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கான தீர்வு தான் என்ன?

மலச்சிக்கல் என்றால் என்ன?

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு முன் அதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மேலும் மலச்சிக்கல் பற்றிய சரியான புரிதலும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை. காலையில் எழுந்தவுடன் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும் நிலையை மலச்சிக்கல் என்று குறிப்பிடுகின்றனர். இது உணவு, வாழ்க்கை முறை அல்லது பரம்பரை காரணமாகவும் நேரலாம். மலச்சிக்கலின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும். இது ஒரு சில நாட்களில் தொடங்கி பல வாரங்கள் வரையிலும் நீடிக்கலாம். சில சமயங்களில் இது தொடர்ந்து நாள்பட்ட மலச்சிக்கலாகவே மாறிவிடுகிறது. 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மலச்சிக்கலுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மூல நோய், குத பிளவு போன்றவையும் இதில் அடங்கும். 

மலச்சிக்கல் நீண்ட காலமாக நீடித்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அதே சமயம் எப்போதாவது மலச்சிக்கல் ஏற்படும் நிலையில் ஒரு சில உணவுகள் வீட்டில் வைத்தியங்களின் உதவியுடன் இதை சுலபமாக சரி செய்யலாம்.

மலச்சிக்கலுக்கு தீர்வு   

raisins for constipation

ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவும் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய எளிய பொருளான உலர் திராட்சை மலச்சிக்கலுக்கான ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இந்து உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு இயற்கையான நார்ச்சத்து கிடைக்கும். இது மலமிளக்கியாக செயல்படுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல், வலி, பிடிப்புகள் மற்றும் அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக இருக்கும். 

வயது வரம்பின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது சிறந்த பலன்களைத் தரும்  

உலர் திராட்சையை எப்படி சாப்பிடுவது? 

soaked raisins for constipation

உலர் திராட்சையை சரியான முறையில் எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். இதற்கு,4-6 உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ள சிறு பிள்ளைகளுக்கு இந்த தண்ணீரை கொடுக்கலாம்.  

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை பலன்  அளிக்காமல் போகலாம். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின் இதை பின்பற்றுவது நல்லது. உங்கள் உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்கவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: 5 கிலோ வரை எடை குறைய நிபுணர் பரிந்துரை செய்யும் டயட் பிளான்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com