herzindagi
hormone balance snak for women health

Hormone Balance Snack : ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்ள மாலையில் இதை சாப்பிடுங்க!

மாலையில் பசிக்கும்பொழுது இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ஆரோக்கியமான ஸ்னாக்ஸை சாப்பிடலாம். இது ஹார்மோன்களை சமநிலையாக வைத்திருக்க உதவும்.
Editorial
Updated:- 2023-06-29, 11:00 IST

மதிய உணவிற்கும் இரவு உணவிற்கும் இடையே அதிக நேரம் இடைவெளி இருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் நிச்சயமாக எல்லோருக்கும் பசிக்கும். குறிப்பாக மாலை நேரங்களில் பசி உணர்வு அதிகமாக இருக்கும். இப்படி பசி எடுக்கும் பொழுது ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். மேலும் இதில் எந்தவிதமான நல்ல ஊட்டச்சத்துக்களும் இருப்பதில்லை. எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட் போன்ற ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முயற்சி செய்யலாம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் மிதமான அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸ் பற்றி பார்க்க போகிறோம். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். இந்த ஸ்னாக்ஸ் குறித்த தகவல்களை  உணவியல் நிபுணரான மன்ப்ரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த பதிவும் உதவலாம்: பேரிச்சம்பழங்களை சாப்பிடுவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

 

மாலை நேரத்திற்கு உப்பு கடலை

upukadalai snacks

மாலை நேர பசியை போக்க உப்புக்கடலையை சாப்பிடும்படி நிபுணர் அறிவுறுத்துகிறார். மேலும் நிபுணரின் கருத்துப்படி மாலையில் பிஸ்கட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். மேலும், இதில் அதிகமாக உள்ள சர்க்கரை அல்லது உப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அதே சமயம் உப்புக்கடலை போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளைத் தரும். உப்பு கடலையில் இரும்புச்சத்து, வைட்டமின், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள குறைந்த கலோரி உடலுக்கு நிறைந்த பலன்களை தரும்.

  • உப்பு கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • உப்பு கடலையில் வைட்டமின் B காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் நோய் வாய்ப்பாடுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். ஆகையால் நோய்கள் அண்டாமல் இருக்க வலுவான எதிர்ப்பு சக்தி பெற உப்புக்கடலையை சாப்பிடலாம்.
  • உப்பு கடலையில் செல்லினியம் மற்றும் வைட்டமின் E உள்ளது. இவை இரண்டும் ஹார்மோன்களை சமநிலையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
  • உப்பு கடலை இன்சுலினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு கடலை சாப்பிடலாம்.

hormone balance snacks

  • உப்பு கடலையில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து நிறைவாகவும் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உப்புக்கடலை சாப்பிடலாம்.
  • உப்பு கடலையில் ஏராளமான கால்சியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இது எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவும்.
  • இதில் உள்ள கோலின் வீக்கத்தை குறைக்க உதவும்.
  • இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் இரும்புச்சத்து நிறைந்த உப்பு கடலையை சாப்பிடலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  5 கிலோ வரை எடை குறைய நிபுணர் பரிந்துரை செய்யும் டயட் பிளான்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com