ஆரோக்கியமாக சாப்பிடும் உணவு பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் பல உடல் நல பிரச்சனையை தவிர்க்கலாம். உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பல நோய்கள் உண்டாகலாம். ஜங்க் ஃபுட், பொரித்த உணவுகள், அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் போன்றவை உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனுடன் நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளும் சிப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளாலும் கலோரிகள் அதிகரிக்கின்றன.
உடல் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு சரியான உணவு முறையை கடைபிடித்தால் எடை இழப்பு சுலபமாகும். ஏனெனில் தேவைக்கு அதிகமாக அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்க கூடும். இந்நிலையில் சமச்சீரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம். ஊட்டச்சத்து நிபுணரான இட்டு சாப்ரா அவர்களின் கருத்துப்படி எந்த ஒரு உணவாலும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உணவில் கார்போஹைட்ரேட்கள், புரதங்கள், நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த டயட் பிளானை பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உருளைக்கிழங்கின் தனித்துவமான நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
உடல் எடையை குறைக்க வளர்ச்சிதை மாற்றத்தை முதலில் மேம்படுத்த வேண்டும். இதற்கு காலையில் எழுந்தவுடன் டீடாக்ஸ் தண்ணீரை குடிக்கலாம். இதற்கு ஒரு 500 மில்லி பாட்டிலில் வெள்ளரி, எலுமிச்சை, ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் இலவங்கப்பட்டை தூள் கலந்து மெதுவாக குடிக்க வேண்டும் இது உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமின்றி நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்
டீடாக்ஸ் தண்ணீர் குடித்து 40-60 நிமிடங்களுக்கு பிறகு ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடலாம். 2 பாதாம், 2 அக்ரூட் பருப்புகள், 2 உலர் திராட்சை மற்றும் 2 அத்திப்பழங்களை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம். இதில் உள்ள நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்து உங்களை நிறைவாக வைத்திருக்கும்.
நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட ஆரோக்கியமான நிறைவான காலை உணவை எடுத்துக் கொள்ளவும். எப்போதும் காலையில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். காலை உணவில் ¼ பிளேட் ஓட்ஸ் கஞ்சி அரை கப் தயிர், 1 ஓட்ஸ் ரொட்டி மற்றும் கலவை காய்கறிகளை சாலட் ஆக செய்து சாப்பிடலாம். இதனுடன் கொழுப்பு நீக்கிய பாலையும் எடுத்துக் கொள்ளலாம்.
காலை உணவிற்கு பிறகு ஒரு சிறிய கப் அளவில் பயறு வகைகளை வேகவைத்து சாப்பிடலாம். குறைந்த கலோரி மற்றும் நிறைந்த நார்ச்சத்து உள்ள இந்த சிற்றுண்டிகள் உங்கள் பசியை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி செரிமானத்தையும் மேம்படுத்தும்
கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து சாலட் ஆக ஒரு கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம், இதனுடன் ஒரு சிறிய கப் சாதம் மற்றும் சம அளவிலான காய்கறி சாப்பிடலாம். உங்கள் மதிய உணவில் 1 கப் வேகவைத்த பருப்பு சேர்ப்பதையும் உறுதிசெய்து கொள்ளவும். இதற்கு பிறகு நேராக நிமிர்ந்து உட்காரவும். பின் 10-15 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யவும். மதிய உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.
மாலை நேரத்தில் நெய்யில் வறுத்த தாமரை விதைகள் அல்லது சீட்ஸ் கலவையை ஸ்னாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.
இரவு உணவை ஆரோக்கியமானதாகவும், மிதமானதாகவும் எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஒரு கப் அளவிற்கு வேகவைத்த பருப்பு/பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் 1 சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். இதற்கு பதிலாக பிரவுன் ரைஸ் மற்றும் பருப்பு கலவையையும் சாப்பிடலாம். இரவு உணவை மிதமாக எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் ஒருசில நாட்களில் காய்கறி சூப் மற்றும் சாலட்களையும் சாப்பிடலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். பின் 7-8 மணி நேர தூக்கம் அவசியம். தூங்குவதற்கு முன் சிறிது நேரம் நடை பயிற்சி செய்யவும். இதனுடன் தினமும் உங்களுக்குத் தேவையான அளவு (2-3 லிட்டர்) தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இனி சமையலுக்கு மஞ்சள் பயன்படுத்தும் பொழுது மிளகையும் தவறாமல் சேர்த்துக்கோங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com