முளைகட்டிய பாசிப்பயிறுடன் உங்கள் காலை பொழுதை தொடங்கும் போது, மிகவும் உற்சாகமாக உணருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், புரதம், நார்ச்சத்து மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த அற்புதமான உணவு, உங்கள் ஆற்றலை அதிகரித்து, எலும்புகளை பலப்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவும்.
மேலும் படிக்க: Apricot benefits: தினமும் உலர்ந்த பாதாமி பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
குறிப்பாக, பழங்காலத்தில் இருந்து ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதற்கு ஒரு முக்கிய உணவாக முளைகட்டிய தானியங்கள் கருதப்படுகின்றன. இவை ஆற்றல், பலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், அன்றாட உணவில் இதனை எளிதாக சேர்த்துக் கொள்ள்லாம். அந்த வகையில், இதில் இருக்கும் நன்மைகளை பார்ப்போம்.
வெறும் வயிற்றில் முளைகட்டிய பாசிப்பயிறை சாப்பிடுவது உடனடி ஆற்றலை அளிக்கிறது. புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பிய இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. எனவே, விளையாட்டு வீரர்கள் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு இது மிகச் சிறந்த உணவாகும்.
மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்த முளைகட்டிய பாசிப்பயிறு, எலும்புகளை பலப்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Jowar millet benefits: கூந்தல் ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை சோளத்தினால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
முளைகட்டிய பாசிப்பயிறில் உள்ள நார்ச்சத்து மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இருதய நோய் அபாயங்களை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான இருதய அமைப்பிற்கு பங்களிக்கிறது.
வைட்டமின்கள் சி, ஈ மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன. இது சரும பொலிவை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில், உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன் வயதான தோற்றத்தையும் ஓரளவிற்கு கட்டுப்படுத்துகின்றன.
முளைகட்டிய பாசிப்பயிறை உங்கள் காலை உணவு அல்லது சிற்றுண்டியில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமான மற்றும் வலிமையான வாழ்க்கை முறையை நோக்கி முன்னேற்றம் அடைகிறீர்கள் என புரிந்து கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com