herzindagi
health benefits in garlic

Garlic Benefits: குளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்ப பூண்டு சாப்பிடுங்கள்!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">தினமும் பூண்டு சாப்பிடுவது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கவும் உதவியாக உள்ளது.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-02-05, 11:03 IST

“தை மாதம் தரையும் குளிரும், மாசி மாதம் மச்சியும் குளிரும்” என்பார்கள். அதற்கேற்றார் போல் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக குளிர் வாட்டி வதைக்கிறது. காத்தாடி இல்லாமல் தூங்க மாட்டேன் என்பவர்கள் கூட அதை அணைத்துவிட்டுத் தான் தூங்குகிறார்கள். அந்தளவிற்கு குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற பருவ கால தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். என்ன தான் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டாலும், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் பூண்டு குறித்த நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உறுதுணையாக உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

garlic health benefits

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

மேலும் படிங்க: பெண்களே..அலட்சியமா இருக்காதீங்க! இதெல்லாம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்?

  • குளிர்காலத்தில் தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் பூண்டு சாப்பிடும் போது, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல், போன்ற பருவ காலத் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • தினமும் பூண்டுசாப்பிடும் நபருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் ஏற்படாது. இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • சல்பர், ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது பூண்டு. குளிர்காலத்தில் நோய் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதைத் தடுக்கிறது.
  • தினமும் பூண்டு சாப்பிடுவது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கவும் உதவியாக உள்ளது. 
  • மற்ற நாள்களை விட குளிர்காலத்தின் தான் நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் இருக்கும். முறுக்கு, பப்ஸ், பஜ்ஜி என குளிருக்கு இதமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ்களால் உடல் எடை அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்த உடல் எடையை இயற்கையான முறையில் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற திட்டமிட்டிருந்தால் நீங்கள் காலை எழுந்தவுடன் பூண்டு சாப்பிடலாம்.  அப்படியே சாப்பிட முடியவில்லை என்றால், பூண்டு மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கொழுப்பின் அளவுகளைக் குறைக்க உதவுகிறது. 

galic digestion problen

  • குளிர்காலத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுவது இயல்பு. குறிப்பாக வீசிங் பிரச்சனை மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் ஒரு எதிரியாகவே அமையக்கூடும். இந்த பருவ காலத்தில் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், மறக்காமல் பூண்டு.  உட்கொள்ளுங்கள்.
  • உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றால், பூண்டு உங்களுக்கு தேர்வாக அமையக்கூடும். 

மேலும் படிங்க: மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் புரத உணவுகள் இவை தான்!

Image Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com