herzindagi
increase metabolism

Metabolism boosting foods: மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் புரத உணவுகள் இவை தான்!

<span style="text-align: justify;">பழங்கள், கீரைகள், காபி, தேநீர் போன்ற உணவுகளில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் அதிகளவில் உள்ளது.</span>
Editorial
Updated:- 2024-02-02, 19:23 IST

மனிதர்களுக்கு மெட்டபாசிம் எனப்படும் வளர்சிதை மாற்றம் முறையாக செயல்படவில்லை என்றால் அவர்களுக்குத் தேவைப்படக்கூடிய ஆற்றல் முழுமையாக கிடைக்காது. ஆம் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்ற அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, உடலில் உள்ள கூடுதலான கலோரிகளை எரிக்கவும் மற்றும் உண்ணும் உணவுகள் ஆற்றல் திறனாக மாறுவதற்கு உதவுவதும் தான் வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம். இவ்வாறு மனிதர்களின் உடலுக்குத் தேவையான எனர்ஜியை வழங்கக்கூடிய மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் புரத உணவுகள் என்னென்ன? எப்படி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது? என்பது குறித்து விபரங்கள் இங்கே..

 metabolism

மேலும் படிங்க: தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பழங்களின் லிஸ்ட்!

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் புரத உணவுகள்:

  • மனிதர்களின் உடலை ஆற்றலோடு வைத்திருக்க உறுதுணையாக உள்ளது புரத உணவுகள். முறையான அளவுகளோடு புரத உணவுகளை நாம் உட்கொள்ளும் போது தசைகள் தேய்மானத்தை சரி செய்யவும், உடல் வலிமைப் பெறவும் புரதங்கள் உதவியாக உள்ளது. 
  • அதிக புரத உட்கொள்ளல் வளர்சிதை மாற்றத்தை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கின்றன என நிரூபிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாப புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது இது ஒவ்வொரு நாளும் 80-100 கலோரிகள் எரிக்கப்படும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. 
  • கோழி, மீன், பருப்பு வகைகள், பால், முட்டை போன்ற புரத உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இந்த உணவுகள் பசியை கட்டுப்படுத்துவதோடு, உங்கள் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க செய்கிறது. மேலும் புரத சத்துக்கள் நிறைந்த உணவுகள் உங்களது உடலுக்குத் தேவையான எரிபொருளாகவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. 

குறிப்பாக மற்ற தாவர உணவுகளை ஒப்பிடும் போது பீன்ஸ், பருப்பு, பட்டாணி, சுண்டல், கருப்பு பீன்ஸ், வேர்க்கடலை போன்ற பருப்புகளில் அதிக புரதங்கள் நிறைந்துள்ளது. மேலும்  பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதோடு பருப்பு வகைகளில் உள்ள ஸ்டார்ச் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமான பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.பொதுவாக தினசரி எரிக்கப்படும் கலோரிகளில் 10% மட்டுமே வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் என்பதால்  உங்களது உணவு முறையில் புரதம் நிறைந்த உணவுகளை மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிங்க: பெண்களே..அலட்சியமா இருக்காதீங்க! இதெல்லாம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்!.

protein foods list ()

இதோடு பழங்கள், கீரைகள், காபி, தேநீர் போன்ற உணவுகளில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் அதிகளவில் உள்ளது. இதே போன்ற ஊட்டச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களோடு உடலுக்கு நல்ல செரிமானத்தை ஏற்படுத்துவதற்கு அதிகளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credit: freeoik

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com