குறைவாக சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் குறையவில்லையா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

உணவில் கட்டுப்பாடுடன் இருந்தாலும் தொப்பையை மட்டும் குறையவில்லையா? நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த அற்புதமான பானத்தை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்…

reduce stubborn belly fat recipe

பொதுவாக பெண்களுக்கு குறிப்பிட்ட வயது அல்லது பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கும். உடல் எடை அதிகரிக்கும் பொழுது வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிகமாக கொழுப்பு சேர தொடங்கிவிடும். குறிப்பாக நமக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து கொள்ள தடையாக இருப்பது இந்த தொப்பை தான். பிரசவத்திற்கு பிறகு அதிக முயற்சிகளை செய்து உடல் எடையை குறைத்தாலும் அல்லது உணவில் கட்டுப்பாடுடன் இருந்தாலும் இந்த தொப்பையை குறைப்பது மட்டும் சற்று கடினமாக இருக்கலாம்.

கவலை வேண்டாம். வயிற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியை உணவியல் நிபுணரான மன்ப்ரித் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் நன்மைகள் மற்றும் அதன் செய்முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை

இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

வெந்தயம்

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் வெளியிடப்படும் சர்க்கரையை தாமதமாக்குகிறது. இது தொப்பை மற்றும் பிடிவாதமான கொழுப்பை குறைக்க உதவும்.

fennel to reduce stubborn belly fat

சோம்பு

சோம்பு சாப்பிடுவது உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கலாம். சோம்பு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பசியார்வத்தையும் குறைக்கிறது.

சுக்கு

சுக்கு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது

கல் உப்பு

உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது

தேவையான பொருட்கள்

dry ginger to reduce stubborn belly fat

  • வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு பொடி - 2 டேபிள் ஸ்பூன்
  • சுக்கு - 2 டேபிள் ஸ்பூன்
  • இலவங்க பட்டை - 2
  • கல் உப்பு - ½ டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - விரும்பினால்

செய்முறை

  • ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாரில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  • இதிலிருந்து அரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு பொடியை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
  • இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
  • அதிகபட்ச நன்மைகளை பெற மதிய உணவிற்கு முன்பு இதை குடிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: வாய் புண் வருவதற்கான காரணம் என்ன? இதற்கான ஒரு எளிய தீர்வையும் தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP