
உடல் எடையைக் குறைக்கும் பானம்: கிராம்பு நமது சமையலறையில் இருக்கும் ஒரு மசாலாப் பொருளாகும், இது சமையலை தவிர பல நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், கிராம்பு உங்களுக்கு உதவும். நீங்கள் தூங்குவதற்கு முன் கிராம்பு டீ குடிக்கலாம். இதனை எப்படி தயாரிப்பது? எடை இழப்புக்கு இது எப்படி உதவும்? என்பதை நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்த தகவலை ஊட்டச்சத்து பயிற்சியாளர் மற்றும் நிறுவனரான நந்தினி அகர்வால் அவர்கள் நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 1 உணவு போதும், குறைந்த செலவில் இதய நோய்களை தடுக்கலாம்!
கிராம்பு டீ உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள மூலப்பொருட்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது. கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. இது தவிர, இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இத்தகைய பண்புகள் உள்ள கிராம்பு டீ உங்கள் எடை இழப்புக்கு நிச்சயம் உதவும்.


குறிப்பு- கிராம்பு டீயை ஒரு நாளைக்கு 1-2 முறைக்கு மேல் குடிக்கக் கூடாது. கிராம்பு உஷ்ணத்தன்மை உடையது. இது தவிர, உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், கிராம்பை சேர்த்துக்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீர், செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com