herzindagi
benefits of eating banana with brown spots

Ripe Banana : நன்கு பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நல்லதா?

நன்கு பழுத்த வாழைப்பழங்கள் எந்த உடல் நல பிரச்சனைகளுக்கு எல்லாம் நல்லது என்பதை தெரிந்துகொண்டால், இனி பழுத்த பழங்களை தூக்கி எறிய மாட்டீர்கள்…
Expert
Updated:- 2023-03-27, 11:42 IST

வாழைப்பழங்களை வாங்கிய ஒரு சில நாட்களிலேயே அவை நன்கு பழுத்து விடும். இதன் தோள்கள் மீதும் பழுப்பு நிற புள்ளிகளை பார்க்க முடியும். இது போன்ற பழங்கள் பெரும்பாலும் குப்பைக்கு செல்கின்றன. நன்கு பழுத்த பழங்களை சாப்பிட எவரும் விரும்புவதில்லை. ஆனால் ஆரோக்கியம் நிறைந்த இப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் படித்தறியலாம்.

வாழைப்பழங்களில் சர்க்கரையின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது அவை நன்கு பழுத்து விடுகின்றன. இதனால் வாழைப்பழத்தின் தோலும் பழுப்பு நிற புள்ளிகள் நிறைந்ததாக மாறிவிடும். இந்த மாற்றம் என்சைம்களால் நிகழ்கிறது. வாழைப்பழத்தின் நிறம் மாறும் பொழுது அதன் இனிப்பு சுவையும் அதிகரிக்கும். இது பற்றிய தகவல்களை NMCH மருத்துவமனையின் மருத்துவர் யோகேஷ் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரகம் பலம் பெற என்ன உணவு சாப்பிடலாம்?

நெஞ்சு வலி பிரச்சனை

மாரடைப்பால் மட்டுமே நெஞ்சு வலி வரும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால் இது தவறானது. பல காரணங்களினால் நெஞ்சுவலியை உணரலாம். பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டால் நெஞ்சுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

banana with brown spots

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

நன்கு பழுத்த வாழைப்பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மை பயிக்கின்றன. இதில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பண்புகள் இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கின்றன. இக்கருத்துகள் யாவும் நிபுணரால் பகிரப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பதிவும் உதவலாம்: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

தசை வலிக்கு நல்லது

ripe banana for health

உங்களுக்கு தசைவலி பிரச்சனை இருந்தால் பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடலாம். பழுத்த வாழைப்பழங்களில் நிறைந்துள்ள பொட்டாசியம் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. பழுத்த வாழைப்பழங்களை தூக்கி எறிவதற்கு பதிலாக அவற்றை உட்கொண்டு பல நன்மைகளை பெற முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com