மனித உடலின் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தின் முக்கிய பணி இரத்தத்தை சுத்தப்படுத்துவதாகும். இரத்தம் உடல் முழுவதும் செல்லும்போது, அது கூடுதல் திரவங்கள், இரசாயனங்கள் மற்றும் கழிவுகளை எடுத்துக்கொள்கிறது. இந்த கழிவுகளை இரத்தத்தில் இருந்து பிரித்து சிறுநீராக வெளியேற்றுவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்கள் இந்த வேலையைச் செய்யத் தவறினால், நிலை மோசமாகலாம்.
சிறுநீரக பாதிப்புகள் தீவிரம் ஆகும் வரை பலருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. வயது, இரசாயனங்கள் மோசமான சுற்றுச்சூழல் போன்ற கரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. இது தவிர உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீர் கற்கள் போன்றவற்றாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் பற்றிய தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் மேகா முகிஜா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
ப்ளூ பெர்ரி
ப்ளூ பெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளன. இது சிறுநீரகங்களுக்கான ஒரு சிறந்த உணவாகும்.
திராட்சை விதை பொடி
திராட்சை விதை பொடியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சிறுநீரகத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகின்றன.
முட்டையின் வெள்ளைக்கரு
புரதம் நிறைந்த முட்டையின் வெள்ளைக்கருவில் குறைந்த அளவு பொட்டாசியம் மட்டுமே இருப்பதால், இது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்ற தனிமம் உள்ளது. இது சிறுநீரக பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை போக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.
சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சையில் வைட்டமின் C மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. வயது முதிர்வின் அறிகுறிகள், சர்க்கரை நோய் போன்ற அறிகுறிகளைத் தடுக்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் திராட்சையில் நிறைந்துள்ளன. மேலும், இதில் வைட்டமின் C மிக அதிகமாகவும், பொட்டாசியம் மிகக் குறைவாகவும் இருப்பதால், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளுக்கான சிறந்த ஆதரமாக உள்ளது.
காலிஃபிளவர்
காலிஃபிளவரில் ஃபிளாவனாய்டுகள், புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அலர்ஜி, வளர்சிதை மாற்ற மற்றும் அழற்சி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கூடுதலாக, காலிஃபிளவரில் பொட்டாசியம் குறைவாக உள்ளது மற்றும் வைட்டமின்கள் K, C, B மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
குருதி நெல்லி(Cranberry)
இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கிறது, இதன் மூலம் சிறுநீரக பாதிப்புகளை குறைக்கலாம். இதில் வைட்டமின் C போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik