
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானோர் தினமும் பத்து மணி நேரத்திற்கு மேலாக கணினி திரையை பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. செல்போன், கணினி உட்பட மின் சாதனங்களை பார்க்கும் நேரம் திரை நேரம் என்று கூறப்படுகிறது. அதிகப்படியான திரை நேரம் கண் அழுத்தத்திற்கு வழிவகுக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. அதிகப்படியான திரை நேரத்தால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்க சில பயனுள்ள வழிகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

அலுவலகமாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் நீங்கள் அமர்ந்து பணியாற்றும் இடத்தில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்தவும். விளக்குகள் இருக்கும் இடத்திற்கு கீழே உட்காரவும். இதனால் கண் கூசுவதை தடுக்கலாம். காலையில் ஜன்னல்களை பயன்படுத்தி போதுமான வெளிச்சத்தை பெறலாம்.
கண் அழுத்தத்தைத் தடுக்க 20 20 20 விதியைப் பின்பற்றவும். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 விநாடிகளுக்கு இடைவெளி எடுத்து 20 அடி தூரத்தில் வேறு எங்கேயாவது பார்க்கவும். இந்த பயிற்சி கண் தசைகளை தளர்த்தவும், அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
செல்போன், லேப்டாப், டிவியில் உள்ள திரை அமைப்புகளை மாற்றவும். அதாவது எழுத்துகள் படிப்பதற்கு ஏதுவாக அதன் அளவை செட் செய்யவும். அதே போல நீல நிற ஒளி உமிழ்வை தடுக்கும் வண்ணத்தை செட் செய்து கண் சோர்வைக் குறைக்கவும்.
மேலும் படிங்க கண்களை பாதுகாக்க உதவும் 20-20-20 விதி
கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை திசை திருப்புவது அவசியம். ஒரு மணி நேரம் திரையை உற்று நோக்கி வேலை பார்த்த பிறகு ஐந்து நிமிடங்களுக்கு வேறு எங்கேயாவது எழுந்து செல்லவும். இது உங்கள் கண்களை சற்று ஓய்வெடுக்க உதவும். வேலை பார்க்கும் போது நீங்கள் கண்களை சிமிட்டாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த ஐந்து நிமிட இடைவேளை கண்களுக்கு சற்று தளர்வை அளிக்கும்.
திரைகளில் இருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியின் வெளிப்பாட்டைக் குறைக்க கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். கண்ணாடி அணியும் நபர்களுக்கு இது தெரியும். இது blue light filter என்று அழைக்கப்படுகிறது. இதனால் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தலாம்.
கண் தசைகளை வலுப்படுத்தவும், அழுத்தத்தைக் குறைக்கவும் உங்கள் அன்றாட வழக்கத்தில் கண் பயிற்சிகளைச் சேர்க்கவும். கண்களை உருட்டி பார்ப்பது, தொலைதூரத்தில் உள்ள பொருட்களில் கவனம் செலுத்துவது போன்ற எளிய பயிற்சிகள் உங்கள் கண்களை நிதானப்படுத்த உதவும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்யவும். பார்வையில் குறைபாடு இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறியவும். கண் மருத்துவர் உங்களை கண்ணாடி அணிய கூறினால் உடனடியாக அதைச் செய்யவும். கண்ணாடி அணியாமல் இருந்தால் கண்களில் அழுத்தம் உண்டாகும். இதனால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com