
மூலிகை டீயின் மிக பெரிய சிறப்பு என்னவென்றால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது ,குடல் ஆரோக்கியம் முதல் வாய் ஆரோக்கியம் வரை நன்மைகளை செய்யும் சிறந்த மூன்று மூலிகை டீ பற்றி இங்கு காணலாம்

இந்த கலவை மூலிகை டீ நம் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுக்களை நீக்குகிறது. குறிப்பாக சிறுநீரகங்கள் மற்றும் ஆர்த்தரிடிஸ் நோயாளிகளின் மூட்டு வலியை குறைக்கிறது.
இதுவும் உதவலாம்:எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ
மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் இவற்றை ஒரு டம்பளரில் கலந்து எடுத்து கொள்ளவும். இதில் சுடு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகவும்

சளி, இருமல் மற்றும் காய்ச்சலை விரட்டும் சக்தி வாய்ந்தது இஞ்சி டீ. இந்த டீ தொப்பையையும் குறைக்க வல்லது
ஒரு கப் நீரை கொதிக்க விடவும். அனைத்து பொருட்களையும் அதில் போடவும். இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் வேக விடவும்.
இந்த கொதித்த கலவையை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இதுவும் உதவலாம்:1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

அஸ்வகந்தா ஒரு மூலிகை என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், இது பல அதிசயங்களை நிகழ்த்த கூடியது என்பது பலரும் அறியாத உண்மை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் மனவுளைச்சல், கோபம் ஆகியவற்றை அடக்கி விடும் ஆற்றல் கொண்டது
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com