Black Neck : கழுத்து கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கழுத்தில் முகப்பரு வந்த இடம் கருப்பாக காட்சியளிக்கிறதா? அதை சரிசெய்யும் வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம். பெண்களுக்கு ஏற்படும் கழுத்து கருமையை நீங்க வீட்டில் என்னென்ன செய்யலாம் என்பதையும் இந்த பதிவில் விளக்குகிறோம். 

 
dark neck cream

முகம் மட்டுமில்லை உடலின் எல்லா பகுதியும் அழகாக இருக்க வேண்டும் என்பதே பெண்கள் பலரின் விருப்பம். முகத்தை மட்டும் கவனிப்பதில் நேரத்தை செலவிடும் பலரும் கழுத்து பகுதிகளைச் சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

முகத்திலும், கழுத்திலும் பருக்கள் ஏற்படும் போது முகப்பருவின் வடு மறையாமல் அந்த பகுதி கருப்பாக மாறிவிடுகிறது. முகத்தில் ஏற்படும் வடுவை சரிசெய்ய பல முயற்சிகளை எடுப்பவர்கள் கழுத்து பகுதியில் அக்கறை காட்ட மறந்து விடுகிறார்கள். எனவே இந்த பதிவில் முகப்பரு வடுவால் கழுத்து பகுதியில் ஏற்படும் கருப்பைச் சரிச்செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

எனவே, நீங்களும் இந்த வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால், கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.

மஞ்சள்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • தயிர் – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை

கோதுமை மாவில் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டைத் தயார் செய்யவும். பின் இந்த பேஸ்ட்டைக் கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து பின், கொதிக்கும் நீரை வைத்து பேக்கைத் துடைத்து எடுக்கவும், பின்பு கழுத்தைச் சுத்தமான தண்ணீரில் கழுவவும். ஒரு நாளைக்கு ஒருமுறை இதை தவறாமல் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு: உங்கள் கழுத்தில் பருக்கள் அல்லது வறட்சி இருந்தால் இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டாம். பரு முழுவதுமாக மறைந்த பின்பு மட்டுமே இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.

dark neck remedies

பால்

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பச்சை பாலை எடுத்து, அந்த பாலில் காட்டன் உருண்டைகளை போட்டு நனைத்து, கழுத்தில் முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி லேசாக கைகளால் தேய்க்கவும். விருப்பமிருந்தால் பாலை கொண்டு முழு கழுத்தையும் சுத்தம் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தில் ஏற்படும் தளர்ச்சியையும் நீக்குகிறது.

குறிப்பு: எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பச்சை பாலுக்கு பதிலாக காய்ச்சிய பாலைப் பயன்படுத்தவும்.

கற்றாழை ஜெல்

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
  • சர்க்கரை – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, இந்தக் கலவையை வைத்து கழுத்தை ஸ்க்ரப் செய்யவும். சில நேரக்களில் பருக்கள் காய்ந்த பிறகும் இறந்த சரும செல்களின் அடுக்கு காரணமாக சருமத்தில் கரும்புள்ளிகள் அப்படியே இருக்கும். இதைச் சரிசெய்ய வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப்பைப் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லில் ஈரப்பதமூட்டும் பண்புகள் மற்றும் வைட்டமின்-C ஆகியவை உள்ளன. இது சருமத்தைப் பிரகாசமாக்கி கருமையை நீக்குகின்றன.

குறிப்பு: எந்த ஒரு வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்வதற்கு முன்பும் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் முதலில் சரும பராமரிப்பு நிபுணரிடம் கருத்து கேட்ட பின்பு இதுப்போன்ற வழிமுறைகளைப் பின்பற்றவும்.

இந்த பதிவும் உதவலாம்:தலைமுடிக்கு ஏற்ற மிகச் சிறந்த எசென்ஷியல் ஆயில் எது தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP